ஒரு முறை படிங்க..விபத்தில்லா தீபாவளி கொண்டாடுங்க..!
using all photo metaAI
செய்ய வேண்டியவை: குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் பட்டாசுகளை விளக்கு மற்றும் ஊதுபத்தி அருகில் வைக்காதீர்கள். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால் அங்கு எண்ணெய் அல்லது பரிந்துரைக்கப்படாத க்ரீம் தடவாதீர்கள்.
எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டாம்; காட்டன் துணிகள் அணிந்து வெடிக்கலாம்.
வீட்டில் உள்ள குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும் போது அவர்களுடைய பாதுகாப்பை பெரியவர்கள் உறுதி செய்ய வேண்டும். முடிந்தளவு குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
பட்டாசு வெடிக்கும் போது பக்கெட் நிறைய தண்ணீர் அல்லது மணல் வைக்கவும்.
பட்டாசு வெடிக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யவும்.
பட்டாசுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கண்களுக்கு ஆபத்தானவை. வெடிக்கும் போது கண்களில் பட்டால் பார்வை இழக்கவும் வாய்ப்புண்டு.