மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கான காரணம் என்ன?

ஒவ்வொருவரிடையேயும் மாதவிடாய் சுழற்சி வேறுபடும். குறிப்பிட்ட தேதியைவிட சிலருக்கு முன்னதாகவே மாதவிடாய் வந்துவிடும். சிலருக்கு நாட்கள் தள்ளிச்சென்று மாதவிடாய் வரும். சிலருக்கு ஆறு மாதம் என நீண்ட நாட்கள் மாதவிடாய் வராமலும் இருக்கும்.
பொதுவாக ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது. எனவே மாதவிடாய் நாள் என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது.
உங்கள் மாதவிடாய் சுழற்சி 21 நாட்களுக்கு குறைவாக இருந்தாலோ அல்லது அடிக்கடி நீங்கள் மாதவிடாய்க்கு உள்ளானால் உங்கள் உடலில் எதாவது பிரச்சினை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ப்ரீமெனோபாஸ்: இது மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய காலமாகும். பொதுவாக நாற்பது வயது அல்லது அதற்கு பிறகு இது தொடங்குகிறது. இது ஹார்மோன்களின் அளவை ஏற்ற இறக்கங்கள் ஏற்படுத்தி, ஒவ்வொரு மாதமும் அண்ட விடுப்பு அதாவது மாதவிடாயை சரியாக நிகழ்த்தாது.
தீவிர உடற்பயிற்சி தீவிர உடற்பயிற்சி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் அல்லது மாதவிடாய் சுழற்சியை முற்றிலுமாக நிறுத்தலாம். உடற்பயிற்சி, உடலின் கலோரி எரிப்பு அளவை அதிகரித்து, உடலில் போதுமான ஆற்றல் இல்லாமல் செய்துவிடும். இது உடல் அண்டவிடுப்பிற்கு தேவையான இனப்பெருக்க ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது.
எடை ஏற்ற, இறக்கங்கள் : குறைந்த காலத்தில் அதிக எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு, உங்கள் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் மாதவிடாயில் பாதிப்பு ஏற்படுகிறது.
மன அழுத்தம் மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். அதில் ஒன்று மாதவிடாய் பாதிப்பு. கடுமையான மன அழுத்தம் உங்கள் ஹார்மோன் அளவை சீர்குலைத்து, ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும்.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS): பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு பொதுவான நிலை. இது கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும்.
Explore