பல்வேறு அதிசயங்களை தாங்கி நிற்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்..!

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 'பூலோக வைகுண்டம்' என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை.
இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
கோவில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தின் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
இங்குள்ள கலைக்கூடத்தில் பழங்கால உலோக சிற்பங்கள் வாள்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. 1966-ல் யுனெஸ்கோ செய்த உதவியால் சிற்பங்களும் ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டன.
வருடத்தில் 322 நாட்களும் பெருமாளுக்கு விசேஷம் என்பது திருவரங்கத்தில்தான். இதில் 21 நாள் நடக்கும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமானவை.
ஸ்ரீரங்கம் கோவில் ஏறத்தாழ 156 ஏக்கர் பரப்பளவில் அதாவது 6,31,000 சதுர மீட்டர் கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகவும், சோழநாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் திகழ்கிறது.
இது 17 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதானாலும், 1987 -ம் ஆண்டு தான் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழநாட்டு காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முதல்தளமாகும்.
ஸ்ரீரங்கம் கோவிலின் பிரமாண்டமான ராஜகோபுரத்தை கட்டுவதற்கு 1.7 கோடி எண்ணிக்கையிலான செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பிகள், 8,000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஜ கோபுரத்தின் மொத்த எடை 1.28 லட்சம் டன் ஆகும்.
ExploreExplore