நடனமாடுபவர்கள் திடீர் மரணம்..ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Photo: MetaAI
உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் செயல்படாத நபர் திடீரென அதிவேகமாக உடலுக்கு அழுத்தம் கொடுத்தாலோ, வேகமாக நடனமாட தொடங்கினாலோ அல்லது கடுமையான விளையாட்டுகளில் பங்கேற்றாலோ மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
Photo: MetaAI
இத்தகைய திடீர் செயல்பாடுகளின் காரணமாக அட்ரினல் சுரப்பிகளில் இருந்து அதிக அளவில் அட்ரினலின் சுரக்கும். இதன் வெளிப்பாடாக இதய துடிப்பு அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க செய்துவிடும். இப்படி உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க செய்துவிடும்.
Photo: MetaAI
ஒலிபெருக்கிகள் மற்றும் டி.ஜே. ஒலிகள் போன்ற எந்தவொரு இசையும் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், இதயத் துடிப்பு மாறுவது ஆய்வில் கண்டறியப்பட்டது.
Photo: MetaAI
மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டது. டி.ஜே.க்கள் போன்ற உரத்த ஒலிகளால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வியத்தகு அளவில் அதிகரிக்கிறது.
Photo: MetaAI
இதனால் மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தால் இறக்கும் அபாயம் உள்ளது. மேலும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம்.
Photo: MetaAI
100 டெசிபலுக்கு மேல் ஒலிகளை நீண்ட நேரம்கேட்டால் காது கேட்கும் பிரச்சனைகள் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது.
Photo: MetaAI
டி.ஜே. சத்தங்கள் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. ஒலி மாசுபாட்டால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.