தஞ்சாவூர் சுற்றுலா.. மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்.!
பெரிய கோயில் : ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இதை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இது பாரம்பரியமிக்க சுற்றுலாத்தலமாகும்.
கோடியக்கரை பூங்கா: இது 1967ம் ஆண்டு கலைமான்களை காக்கப்பதற்காக 17.26 சதுர கி.மீட்டரில் கோடியக்கரையில் அமைக்கப்பட்டது. இந்த சரணாயலத்தில் பல்வேறு விதமான கடல் பறவைகளும் வந்து செல்கின்றன.
சரஸ்வதி நூலகம்: தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் இந்த சரஸ்வதி மஹால் நூலகம் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான நூலங்களிலும் ஒன்றாக அறியப்படுகிறது. இந்த நூலகம் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
சுவாமிநாத மலை முருகன் கோவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலை குறிக்கிறது. இத்தலத்தில், முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்ததால் சுவாமிநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
பூண்டி மாதா பேராலயம் (Poondi Madha Basilica): இது தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் பூண்டி என்னும் ஊரில்,அமைந்துள்ளது.இந்த ஆலயத்திற்கு அருள்பெறுவதற்காக கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களும் வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூர் மாளிகை (அரண்மனை) : இது தஞ்சாவூர் நகரில் உள்ள முக்கியமான அரண்மனையாகும். இந்த அரண்மனை தஞ்சையை ஆண்ட நாயக்கர்களால் கட்டப்பட்டது. இதுவும் சுற்றுலா தலமாக விளங்குகிறது.
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்: இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால், கட்டப்பட்டது. இது குரு ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. தினமும் ஏரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
Explore