நீரிழப்பை தடுக்கும் வீட்டு பானம்...கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!
credit: freepik
வாந்தி எடுத்தாலோ அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ நம் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு உப்பின் சமநிலை சீரற்று போய்விடும்.
credit: freepik
அப்படி உடலில் இருந்து அதிக நீர் வெளியேறுவது கடுமையான உடல் நல பிரச்சினைகளையும் உருவாக்கும். ஓ.ஆர்.எஸ். எனப்படும் வாய்வழி நீரேற்ற கரைசலை பருகுவதன் மூலம் நீரிழப்பை தவிர்க்கலாம். அதனை வீட்டிலேயே தயாரிக்கும் முறை குறித்து பார்ப்போம்.
credit: freepik
செய்முறை: ஒரு லிட்டர் நீரை கொதிக்க வைத்து பின்பு அதனை குளிர வைக்கவும்.
credit: freepik
அந்நீருடன் அரை தேக்கரண்டி உப்பும், ஆறு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்க்கவும். தேவைக்கேற்ப சிறிதளவு எலுமிச்சைச் சாறை கலந்து கொள்ளலாம்.
credit: freepik
இக்கரைசலினை நன்கு கலக்கியபின் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர் சத்து இழப்பு ஏற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம். ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல, கரைசலை எடுத்துக்கொள்ளும் அளவு மாறுபடும்.
credit: freepik
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் வரை கொடுக்கலாம். இரண்டு முதல் ஒன்பது வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம்.
credit: freepik
இதனை மட்டும் பருகாமல் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். வாந்தியோ, வயிற்றுப்போக்கோ தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.