தீபாவளி: பலகாரத்தில் எள்ளு சேருங்க..ஏன்னா அதுல இருக்கும் நன்மையை பாருங்க.!!
all photo using freepik
கருப்பு எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது.
எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும்.
தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும்.
இதில் நிறைந்துள்ள கால்சியம், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
சுடுநீரில் சிறிதளவு எள்ளிலை போட்டு குளியல் செய்து வந்தால், இது உடல் வலிகளை போக்கி ஆரோக்கியமாக வைக்கலாம்.
பனை வெல்லம், கருஞ்சீரகம், எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சினைகளைத் தீர்க்கும்.
புற்றுநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம், 'சீசமின்' என்ற மூலக்கூறு தான். இது, எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள் ஆகும். இது புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும்.