உலர் நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் நன்மைகள்..!

உலர் நெல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.
உலர்ந்த நெல்லிக்காய் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
உலர்ந்த நெல்லிக்காயில் ஹெபடோப்ரோடெக்டிவ் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
உலர் நெல்லியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான செரிமானத்திற்கு பங்களிக்கிறது.
உலர்ந்த நெல்லிக்காயில் நார்ச்சத்தும் அதிகளவு நிறைந்துள்ளது. இது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
உலர் நெல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
இதில் வைட்டமின் பி1, பி2 நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான கண் பார்வைக்கு வழிவகுக்கிறது.