வெறுங்காலுடன் புல்வெளியில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
credit: freepik
வெறுங்காலில் புல்வெளியில் நடந்தால் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் செய்யும்.
credit: freepik
இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்யும். தினமும் குறிப்பிட்ட நேரம் புல்வெளியில் நடப்பது ரத்த நாளத்தின் செயல்பாடுகளை சீராக்கவும் உதவும்.
credit: freepik
கணினி, செல்போன் என நேரத்தை செலவிடுவது கண் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. புல்வெளியில் நடக்கும்போது பச்சை நிற புற்களை பார்ப்பது கண்களுக்கு இதமளிக்கும். கண்களுக்கும் நலம் சேர்க்கும்.
credit: freepik
மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும்.
credit: freepik
காயங்களால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கான எளிய வழி பூமியுடன் தொடர்பு கொள்வதுதான். புல்வெளியில் நடைப்பயிற்சி செய்வது பலன் தரும்.
credit: freepik
புல் மீது வெறுங்காலுடன் நடக்கும்போது காலில் உள்ள சில அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படும். இவை நரம்புகளை தூண்டி நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.
credit: freepik
கணுக்கால் மற்றும் கால்களில் உள்ள தசைநார்களை வலுப்படுத்தும். முழங்கால் வலி மற்றும் முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.