ஏ.சி. அறைக்குள் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள்!

Photo: MetaAI
ஏ.சி. அறைக்குள் நிலவும் வெப்பத்தை மட்டும் குறைப்பதில்லை, ஈரப்பதத்தையும் குறைத்துவிடும். சிலருக்கு சருமம் நெகிழ்வுத்தன்மை அடைந்து சுருக்கங்கள் ஏற்படக்கூடும். இது விரைவிலேயே வயதாகும் தோற்றம் எட்டிப் பார்ப்பதற்கான அறிகுறியாக மாறக்கூடும்.
Photo: MetaAI
ஏ.சி. ஈரப்பதத்தை குறைப்பதன் காரணமாக நீரிழப்புக்கு இது வித்திடும். அதன் காரணமாக தாகம், சோம்பல், சோர்வு போன்றவை எட்டிப்பார்க்கும்.
Photo: MetaAI
சிலருக்கு கண்கள் வறட்சி நிலையிலேயே காணப்படும். கண்களில் ஈரப்பதம் குறைந்து கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கக்கூடும்.
Photo: MetaAI
ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் குளிர்ந்த, உலர்ந்த காற்று சுவாச பாதைக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.
Photo: MetaAI
ஏ.சி.யை முறையாக பராமரிக்காவிட்டால் அதில் படர்ந்திருக்கும் தூசு, அழுக்குகள், பூஞ்சை காளான் உள்ளிட்டவை ஏ.சி. வெளியிடும் குளிர் காற்றில் கலந்து ஒவ்வாமை, சுவாச நோய்களுக்கு காரணியாகிவிடும்.
Photo: MetaAI
ஏ.சி. அறைக்குள் அதிக நேரம் இருந்தால், உடலில் வியர்வை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும். இதனால் இயற்கையாகவே உடலில் எண்ணெய் உற்பத்தியாகும் திறனும் பாதிப்படையும்.
Photo: MetaAI
உடலில் எண்ணெய் இல்லாததால் முடி வறட்சி அடையும். முடி உடைவது, முடி உதிர்வது போன்ற பிரச்சினைகளும் எட்டிப்பார்க்கும்.
Photo: MetaAI
எக்ஸிமா, சொரியாசிஸ், ரோசாசியா போன்ற தோல் வியாதிகளை கொண்டவர்கள் ஏ.சி. அறையில் அதிக நேரம் செலவிடும்போது ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் காற்று நிலைமையை மோசமாக்கக்கூடும்.
Photo: MetaAI
உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை பருகி வரலாம். ஏ.சி.யை முறையாக பராமரிப்பதும் முக்கியமானது.
Photo: MetaAI
Explore