துரிதமாக மலைகளில் ஏறும் குரங்குகளின் அசாத்திய ஆற்றல்.!

குரங்குகள் எந்த பிடிமானமும் இன்றி பாறைகள், மலைகள் மீது ஏறும் அசாத்திய ஆற்றல் கொண்டவை. உடல் உறுப்புகளும், அவைகளின் செயல்பாடுகளும் தான் அதற்கு காரணம்.
குரங்குகளின் கைகள் மற்றும் கால்கள் வலிமையான, வளைந்த விரல்கள் கொண்டவை.
பாறைகளின் பிளவுகள் மற்றும் கடினமான மேற்பரப்புகளை உறுதியாக பிடிக்க அவை உதவுகின்றன.
குரங்குகளின் தோள் மற்றும் தொடை இணைப்பு பகுதிகள் அதிகமாக அசையக்கூடியவை. இதனால் அவைகளால் செங்குத்தாகவும் சுலபமாகவும் ஏற முடிகிறது.
பாறை, மலை உள்பட சீரற்ற பகுதிகளில் ஏறும்போது உடல் சமநிலையைத் தக்கவைக்க வால் சிறந்த ஆயுதமாக செயல்படுகிறது.
குரங்குகள் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவை.
அவற்றின் உடல் அசைவுகளும் துரிதமாக இருக்கும். இந்த விரைவான உடல் மாற்றங்கள் மூலம் செங்குத்தான அல்லது சீரற்ற பாறை பரப்புகளிலும் அவைகளால் எளிதாக ஏற முடிகிறது.
Explore