ஏன் பாயில் படுத்து உறங்க வேண்டும்?

ஏன் பாயில் படுத்து உறங்க வேண்டும்?

Published on
நம் முன்னோர்கள் பாயில் படுத்து உறங்கும் வழக்கத்தை பின்பற்றி வந்தனர். ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கையான பாய்களையே நம்பியிருந்தனர்.
ஆனால் இந்த நவீன காலத்தில் பலரும் பஞ்சு மெத்தையில் உறங்குவதை விரும்புகின்றனர். பாயின் மகிமையை உணர்ந்து அதில் உறங்கும் வழக்கத்தை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
உடலில் உருவாகும் அதிகமான சூட்டை உள்வாங்கி, உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது பாய்.
கட்டிலின் மெத்தையை விட தரையில் பாய் விரித்து உறங்குவது உடல் உஷ்ணத்தை போக்கும். வாதத்தை கட்டுப்படுத்தும்.
பாய் விரித்து உறங்குவதால் நினைவுத்திறனை மெருகேற்றும். உடலுக்கு சீரான ஓய்வையும், நிம்மதியான உறக்கத்தையும் அளிக்கும்.
பாய் உறக்கம் மன அமைதியை மேம்படுத்தும். மேலும் மார்பக தசைகள் தளர்ந்து விரிவடைய வழிவகை செய்யும். குறிப்பாக பாயில் தலையணை இல்லாமல் தூங்குவது சிறந்தது.
நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பாய் மூன்று ஆண்டுகள் வரை தனது இயற்கை தன்மையை இழக்காது. கால மாற்றத்திற்கேற்ப பாய்களும் பயன்படுத்துவதற்கேற்ப உருமாற்றமடைந்து கொண்டிருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com