நமது உடலில் உள்ள நரம்பு மண்டலம் ஒட்டுமொத்த உடம்பையும் கட்டுப்படுத்தும் மையமாக திகழ்கிறது. அத்துடன் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் அவற்றினுடைய செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பது நரம்பு மண்டலம் ஆகும்.
நரம்புத் தளர்ச்சி என்பது நரம்புகள் பலவீனமடைந்து, உடலின் பல்வேறு பகுதிகளில் செயல்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது.
சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு நோய் என்பது நரம்புத்தளர்ச்சிக்கு மிகவும் பொதுவான காரணமாகும்
உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துகளான வைட்டமின் பி12, பி6 போன்ற வைட்டமின்கள் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. இந்த வைட்டமின்கள் குறைபாடு ஏற்பட்டால் நரம்புத்தளர்ச்சி ஏற்படலாம்.
மது அருந்துதல் நரம்புகளை சேதப்படுத்தி நரம்புத்தளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
உடற்பயிற்சி மற்றும் உற்சாக காரணங்களுக்காக விளையாடும் பொழுது ஏற்படும் காயங்கள், வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்கள் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டு நரம்புத்தளர்ச்சி ஏற்படுத்தலாம்.
உடலின் இயக்கங்களை முடக்கி விடக்கூடிய முடக்கு வாதம், லூபஸ் போன்ற ஆட்டோ இம்யூன் நோய்கள் நரம்புகளைத் தாக்கி நரம்புத்தளர்ச்சி ஏற்படுத்தலாம்.
ஒரு சிலருக்கு பரம்பரையாக வரக்கூடிய சில மரபணு நோய்கள் நரம்புத்தளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
நரம்புத் தளர்ச்சிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கியம்.