வீட்டில் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள்!
Photo: wikipedia
தூதுவளை: தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். சளி, இருமல் போன்ற நோய்களுக்கு உதவுகிறது
Photo: wikipedia
கற்றாழை: சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
Photo: wikipedia
நொச்சி: நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.
Photo: wikipedia
கற்பூரவல்லி: நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் பிரச்சினையை குணப்படுத்தும் தன்மைக்கொண்டது. அஜீரணம் மற்றும் வயிற்றுப் பிரச்சினையை சமாளிக்கும் திறன் கொண்டது.
Photo: wikipedia
அருகம்புல்: அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும்.
Photo: wikipedia
துளசி: துளசி இலையை சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
Photo: wikipedia
வெற்றிலை: வெற்றிலை போடுவதால், ஈறு வலி, ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகளை நீக்கும். அதுமட்டுமல்லாமல், பற்களை கெட்டியாக பிடிக்க ஈறுகளுக்கு உதவி செய்யும்.