உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு உருவான கதை..!

திருப்பதியில் லட்டு பிரசாதம் கொடுக்கப்படுவது மட்டும் தான் பலருக்கும் தெரியும். அந்த லட்டு உருவான வரலாறும், அந்த லட்டினை தயாரிக்க கடைபிடிக்கப்படும் முறையும் பலருக்கும் தெரியாது.
1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் திருப்பதி கோவிலில் லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பக்தர்களுக்கு பூந்தியாக இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது.
1803 முதல் லட்டு வடிவில் விலைக்கு விற்கும் நடைமுறை அமலானது. அப்போது அதன் விலை காலணா மட்டுமே.
310 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனியே ஒரு துறை அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது.
திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. 'அஸ்தானம்', கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
விஷேச நாட்களில் 750 கிராம் எடையுடன் தயாரிக்கப்படும் லட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
Explore