சூப்பரான கோவக்காய் பொரியல்.!!

சூப்பரான கோவக்காய் பொரியல்.!!

Published on
கோவக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும். வாரத்தில் இருமுறை கோவக்காயை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
தேவையான பொருட்கள் : கோவக்காய் - 3 கப், சின்னவெங்காயம் - அரை கப், தக்காளி - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு ஆகியவை.
செய்முறை: முதலில் கோவக்காய், சின்னவெங்காயம், தக்காளியை மிதமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.
பின்னர் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி, உப்பு போன்றவற்றையும் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் கோவக்காயை போட்டு வேகவைத்து இறக்கவும். சூப்பரான கோவக்காய் பொரியல் ரெடி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com