சென்னையில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்!

Photo: wikipedia
மெரினா கடற்கரை: அழகான மாலைப் பொழுதைக் கழிப்பதில் உள்ளூர் மக்களின் முதல் தேர்வு, மெரினா கடற்கரை. உலகின் மிகப்பெரிய நகர்ப்புற கடற்கரைகளில் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை இந்த இடம் ஈர்க்கிறது
Photo: wikipedia
சென்னை அருங்காட்சியகம்: சென்னை எழும்பூர் பகுதியில், சென்னை அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல் போன்ற 46 காட்சிக்கூடங்கள் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.
Photo: wikipedia
கலங்கரை விளக்கம்: கலங்கரை விளக்கத்திற்குள் நுழைந்தவுடன், கடலின் இனிமையான ஒலிகள் அமைதி மற்றும் மனமகிழ்ச்சியை தரும். கலங்கரை விளக்கத்தின் உச்சியில் இருந்து, வங்காள விரிகுடாவின் முடிவில்லாத அழகை ரசிக்கலாம்.
Photo: wikipedia
ரிப்பன் கட்டிடம்: சென்னையில் இருக்கும் பழமையான கட்டிடங்களுள் ஒன்றாக ரிப்பன் கட்டிடம் இருக்கிறது. நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த ரிப்பன் பிரபுவின் பெயர் இக்கட்டிடத்திற்கு சூட்டப்பட்டது.
Photo: wikipedia
கிண்டி தேசிய பூங்கா: இந்தியாவின் 8வது சிறிய தேசியப் பூங்காவான கிண்டி தேசியப் பூங்கா, நகரின் எல்லைக்குள் அமைத்துள்ளது. இங்கு புள்ளி மான் போன்ற அரிய வகை விலங்குகளும், பறவைகளும் உள்ளன.
Photo: wikipedia
விவேகானந்தர் இல்லம் மற்றும் அருங்காட்சியகம்: விவேகானந்தரின் வாழ்க்கையை அறிய விரும்புபவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் ஒரு அருமையான வாய்ப்பு.
Photo: wikipedia
கன்னிமாரா நூலகம்: பழமையான பொது நூலகங்களில் ஒன்று புகழ்பெற்ற கன்னிமாரா நூலகம். கன்னிமாரா நூலகம் ஆர்வமுள்ள வாசகர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாகும்.
Photo: wikipedia
Explore