metaAI
metaAI

சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?

Published on
சிவப்பு நிற ஜூஸ் பல்வேறு வண்ணங்களை கொண்ட பழங்களை உட்கொள்ள முயற்சிப்பது நல்லது. ஏனென்றால், பழங்களின் நிறங்களை பொறுத்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். அவற்றுள் சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
metaAI
ஸ்ட்ராபெர்ரி: போலேட், போலிக் அமிலம் நிறைந் திருக்கும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
metaAI
செர்ரி: இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகியவையும் நிரம்பப்பெற்றது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத் திருக்க உதவுகிறது.
metaAI
தர்பூசணி: இது 92 சதவிகிதம் தண்ணீர் கொண்டது. வெப்பமான கோடை நாட்களில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது சிறந்த தேர்வாக அமையும்.
metaAI
மாதுளை: இந்த பழத்தில் பாலிபினால்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்கக்கூடியவை.
metaAI
கிரேப் புரூட்: இளஞ்சிவப்பு நிற கிரேப் புரூட் பழத்தில் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. பெக்டினும் அதிகமாக உள்ள இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
metaAI
ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பது பல்வேறு வழிகளில் எடை குறைப்புக்கு உதவும்.
metaAI
பிளம்ஸ்: இந்த பழத்தில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. பல்வேறு நாள்பட்ட நோய் பாதிப்புகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க இது உதவுகிறது.
metaAI

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com