ஆண்களை விட பெண்களுக்கே தொப்பை அதிகம்..குறைக்கணுமா?
முன்பெல்லாம் தொப்பை ஆண்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். ஆனால், இப்பொழுதெல்லாம் பெண்களுக்கும் தொப்பை அதிகமாக இருக்கிறது. இதை குறைப்பதற்கான வாய்ப்புகளை காணலாம்.
ஆரோக்கியமான கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். இம்மாதிரி சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பை, உடலில் தேவையில்லாத இடத்தில் சேரவிடாது.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து தினமும் குடிக்கலாம்.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு தினமும் குடிக்கலாம். அடிக்கடி கொள்ளு ரசம் குடிக்கலாம்.
பசி இல்லாத போது உண்ணக் கூடாது. பசி இல்லாமல் உண்ணும் உணவு அனைத்தும் உடல் எடையைக் கூட்டும்.
தினமும் தண்ணீர் சற்று அதிகமாகவே குடிக்கவேண்டும். ஓட்ஸ், கேரட், பருப்பு வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.
சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்.