இந்தியா வந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி..செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு!

Photo: PTI
2022ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனும், உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களில் ஒருவருமான மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்.
Photo: PTI
கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் நிறுவப்பட்டுள்ள தனது 70 அடி உயர உருவச்சிலையை திறந்து வைத்தார்.
Photo: PTI
தொடர்ந்து அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட் லேக் ஸ்டேடியத்தில் அவரை காண்பதற்கான பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
Photo: PTI
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மெஸ்ஸியை, இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் வரவேற்றதுடன் அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர்.
Photo: PTI
சுமார் 22 நிமிடங்களில் மெஸ்ஸி ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்து கொண்டு வெளியேறினார். மெஸ்ஸியை கண் குளிர பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ஸ்டேடியத்தில் வன்முறையில் ஈடுபட்டனர்.
Photo: PTI
தொடர்ந்து ஐதராபாத்துக்கு சென்ற மெஸ்ஸி, அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோருடன் இணைந்து விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவருக்கு மெஸ்ஸி அர்ஜென்டினா அணியின் சீருடையை பரிசாக வழங்கினார்.
Photo: PTI
இன்று மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மைதானத்தில் நிரம்பி இருந்த ரசிகர்கள் 'மெஸ்ஸி மெஸ்ஸி' என கோஷம் எழுப்பினர்.
Photo: PTI
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை மெஸ்ஸி சந்தித்து பேசினார். தனது கையெழுத்திட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மெஸ்ஸிக்கு சச்சின் வழங்கினார்.
Photo: PTI
நாளை (15.12.2025) டெல்லி போய் சேரும் அவர் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் கால்பந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அடுத்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
Photo: PTI
Explore