எது தெரியாம போச்சே..திண்டுக்கல்லில் இத்தனை சுற்றுலா தலங்களா?
திண்டுக்கல்லில் மலைமீது அமைந்துள்ள மலைக்கோட்டை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோட்டையாகும். மலைக்கோட்டையை மன்னர்கள் எதிரிகளை மறைந்து தாக்க இராணுவமுகாமாக பயன்படுத்தி உள்ளனர். இந்த இடத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.
கோட்டை மாரியம்மன்: திண்டுக்கல்லின் முக்கிய அடையாளம் கோட்டை மாரியம்மன் கோயில். விஜய நகரப் பேரரசு காலத்தில் போர் வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கியது. திண்டுக்கல் கோட்டையின் அடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.
மினி கொடைக்கானல் என அழைக்கப்படும் சிறுமலை திண்டுக்கல்லின் முக்கியமான ஒரு இயற்கை வாசஸ்தலமாகும். ஐம்பத்தைந்தாயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்ட சிறுமலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது காந்தி கிராமம். சிறுமலையின் அடிவாரத்தில் இரயில் பாதையில் இருபக்கமும் பல கட்டடங்களுடன் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. குழந்தைகள், மாணவர்களுக்கு சிறந்த இடமாகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் அமைந்த ஒரு பேரூராட்சி சின்னாளப்பட்டி.இங்கு முதன்மைத் தொழிலாக கைத்தறி திகழ்கிறது. இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான வெளிநாடுகளிலும் இப்புடவைக்கு மிகச்சிறந்த வரவேற்பு உள்ளது.
பழனி மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில் முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படைவீடாகும். இக்கோவிலின் சிறப்பான அம்சமே நவபாஷாணத்தைக் கொண்டு சித்தர் போகர் ஸ்தாபித்த முருகன் சிலைதான். திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு செல்ல ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் கலைநயம் மிக்க ஒரு வைணவத்தலம் தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில். இத்தலம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு உள்ள கலைநயமிக்க சிற்பங்கள் காண்போரை வியக்க வைக்கின்றன.
ஆத்தூர் காமராஜர் அணை :திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த ஆத்தூரிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையானது அன்றைய முதல்வர் மாண்புமிகு காமராஜர் அவர்களால் 1955 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
Explore