தமிழக செய்திகள்

சேலம் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி..!
சேலம்,

மேட்டூரில் மின்னல் தாக்கி 3 பசு மாடுகள் இறந்தன.

கனமழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தம்மம்பட்டி, வாழப்பாடி, கரியகோவில் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கனமழை பெய்ததால் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. குறிப்பாக அந்த பகுதியில் வயல்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதேபோல், மேட்டூர், வீரகனூர், டேனிஷ்பேட்டை பகுதிகளிலும் கனமழை பெய்தது.

3 மாடுகள் பலி

மேட்டூர் மூலக்காடு கிராமத்தில் கனமழை பெய்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் அந்த பகுதியில் மேய்ச்சலில் இருந்த விவசாயி சின்னசாமிக்கு சொந்தமான ஒரு பசு மாடும், லதா என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகளும் மின்னல் தாக்கி இறந்தன. இதனை பார்த்து அதன் உரிமையாளர்கள் கண் கலங்கினர்.

சட்டவிரோதமாக கருக்கலைப்பு : மருத்துவர் உட்பட 3 பேர் கைது
கன்னியாகுமரி,

சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்ட வழக்கில் மருத்துவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருக்கலைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது நர்சிங் கல்லூரி மாணவி. இவர் வீட்டிற்கு அருகில் தினேஷ் என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார். தினேஷ் 17 வயது நர்சிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததால் மாணவி கர்ப்பமடைந்தார். இதனை அறிந்த பெற்றோர் தினேஷ் மற்றும் அவரது மனைவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முடிவு எடுத்தனர். பின்னர், மாணவிக்கு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது.

3 பேர் கைது

இது குறித்து மாணவி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவர் கிஷோர் ( வயது 61), அவரது மகள் சரண்யா ( வயது 32) மற்றும் நர்ஸ் ரேணுகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள தினேஷ் மற்றும் அவருக்கு உடைந்தயாக இருந்த அவரது மனைவி மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை-குருவாயூர் ரெயிலில் கண்ணாடி மேற்கூரை பெட்டிகள்
மதுரை,

இந்திய ரெயில்வேயில், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் இயற்கையை கண்டு ரசிக்கும் வகையி லான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 'விஸ்டோடம்' என்ற பெயரிலான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரெயில் பெட்டிகளில் மேற்கூரை கண்ணாடியாக இருக்கும். அதன் வழியாக மலை, கடல் அழகை ரசிக்க முடியும். முதலில் தூரந்தோ எக்ஸ்பிரஸ், பின்னர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டன. அதனை தொடர்ந்து, வந்தே பாரத் ரெயில்களில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகின்றன.

மதுரை-குருவாயூர் ரெயில்

இதே போல் விஸ்டோடம் பெட்டிகளில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் மேற்கூரையில் கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கும் நிலையில், ரெயில் பெட்டிக்குள் இருந்து வெளியில் பார்த்து ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு செல்லும் பயணிகளை கவருவதற்காக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, மதுரையில் இருந்து குருவாயூருக்கு தினசரி ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.15 மணிக்கு குருவாயூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் குருவாயூரில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை வந்தடைகிறது.

மதுரையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக குருவாயூருக்கு இயக்கப்படும் ரெயிலானது, விஸ்டோடம் பெட்டிகளுடன் கூடிய ரெயிலாக இயக்கப்பட உள்ளது.

22-ந் தேதி முதல்

இந்த ரெயில் (வ.எண். 16327/16328) இருமார்க்கங்களிலும் வருகிற 22-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மலை, தென்காசி பொதிகை மலை, ஆரியங்காவு பாலம், தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை பயணிகள் ரசிக்கும் வகையில் இந்த ரெயில் பயணம் இருக்கும்.

நாட்டின் முதல் விஸ்டோடம் ரெயில் (வ.எண்.58501/58502) விசாகப்பட்டினம்-கிரந்துல் இடையே இயக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 995 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரெயில் பாலம் வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது. அத்துடன், 58 குகைகள், 84 பாலங்கள், ஹைதிகி நீர்வீழ்ச்சி, கிரீன்வேலி மற்றும் ஆந்திர மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத தலங்கள் வழியாக செல்கிறது.

பிரீமியம் கட்டணம்

இந்த நிலையில், மதுரை-குருவாயூர் விஸ்டோடம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16327) வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை விஸ்டோடம் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16328) வருகிற 23-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

ஆனால், இந்த ரெயிலில் பயணம் செய்ய பிரீமியம் கட்டணம் வசூலிக்கப் படும். அதாவது, சதாப்தி ரெயிலின் எக்சிக்யூட்டிவ் வகுப்பு கட்டணத்தை விட சுமார் ஒரு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். சதாப்தி ரெயிலில் அடிப்படை கட்டணமாக 50 கி.மீ. தூரத்துக்கு ரூ.387 வசூலிக்கப்படும். 100 கி.மீ. தூரத்துக்கு ரூ.490 அடிப்படை கட்டணமாக வசூலிக்கப்படும். இது தவிர, முன்பதிவு கட்டணம், கிளார்க் கட்டணம், அதிவிரைவு ரெயிலுக் கான கட்டணம், துணை கட்டணம் என தனியாக வசூலிக்கப்படும். இதில், சலுகை கட்டண டிக்கெட் கிடையாது.

10 சதவீத தள்ளுபடி

பயணிகளுக்கான இறுதி அட்டவணை தயாரிக்கப்பட்ட பின்னர் காலியாக உள்ள இருக்கைகளை 10 சதவீத தள்ளுபடி கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவை பொறுத்தமட்டில் ரெயில் ஒன் செயலி மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த ரெயில் பயணிகளிடம் பெரி தும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெயிலில் 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 8 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட் டுள்ளன. தற்போது ஒரு பொது பெட்டிக்கு பதிலாக விஸ்டோடம் பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த பெட்டிகள் அனைத்தும் எல்.எச்.பி. வகை பெட்டிகள் ஆகும்.

மழை, பலத்த காற்று: பாம்பன் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
ராமேசுவரம்,

பருவமழை பெய்வதையொட்டி பாம்பன் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

குருசடை தீவு

பாம்பன் குந்துகால் அருகே நடுக்கடலில் உள்ளது குருசடை தீவு. வனத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த தீவுக்கு வனத்துறை சார்பில் சுமார் 20 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ராமேசுவரம் வரக்கூடிய அதிகமான சுற்றுலா பயணிகள் வனத்துறை மூலம் இயக்கப்படும் பைபர் படகில் பயணம் செய்து தீவின் அழகை பார்த்து ரசித்து வருகின்றனர். இதற் கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

படகு போக்குவரத்து நிறுத்தம்

இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 4 நாட்களாக குருசடை தீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி 4 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று முதல் படகில் பயணம் செய்து குருசடை தீவை பார்ப்பதற்காக வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து இயக்கப்படாததால் கடற்கரையில் நின்று கடல் நடுவே தூரத்தில் தெரிந்த தீவை பார்த்தபடி மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பலத்த மழை பெய்வதுடன் அவ்வப்போது காற்றின் வேகமும் அதிகம் இருந்து வருவதால் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மற்றும் மழை குறைந்த பின்னர் வழக்கம்போல் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்றார்.

சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… கிளியூர் நீர்வீழ்ச்சி சீரமைக்கப்படுகிறது!
சேலம்,

சுற்றுலாத்துறை சார்பில் ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சியை ரூ.78 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளியூர் நீர்வீழ்ச்சி

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏரளாமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களை மேம்படுத்தாமல் இருப்பதாகவும், அவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து ஏற்காடு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்காக ரூ.9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இதன் ஒருபகுதியாக ஏற்காடு படகு இல்லத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சியை மேம்படுத்த ரூ.78.61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த அருவி பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம், நடைப்பாதை, சுகாதார வளாகங்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளது.

மேம்பாட்டு பணிகள்

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தாலும் கிளியூர் நீர் வீழ்ச்சிக்கு ஒரு சிலர் மட்டுமே செல்கிறார்கள். அங்கு மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் விழும். ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இருந்து அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுகிறது.

நீர்வீழ்ச்சியை நெருங்கியதும் வாகனங்களை குறிப்பிட்ட தொலைவில் நிறுத்திவிட்டு 200 படிக்கட்டுகளில் கீழே நடந்து செல்ல வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும். இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நீர்வீழ்ச்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன, என்றனர்.

அரசு பேருந்து மோதி விபத்து: தாய், மகன் உயிரிழப்பு
தேனி,

அரசு பேருந்து மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாய், மகன் உயிரிழப்பு

தேனி மாவட்டம் போடி அருகே சிலமரத்துப்பட்டியில் உள்ள பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக, சுமதி, அவரது கணவர் மணிவாசகம், மற்றும் மகன் விஜய் பிரவீன்(வயது 25) ஆகிய 3 பேரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுமதி, அவரது கணவர் மற்றும் மகன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சுமதி மற்றும் விஜய் பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மணி வாசகத்தை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஊசிகள் கண்டெடுப்பு: ஊக்க மருந்து ஊசிகளா? போலீசார் விசாரணை
மதுரை,

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்த நிலையில் வீரர்கள் கழிவறைகளில் கிடந்த ஊசிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இது ஊக்க மருத்துக்காக பயன்படுத்தியதா? என விசாரணை நடக்கிறது.

ரேஸ்கோர்ஸ் மைதானம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான தடகள பேட்டிகள், மாணவிகளுக்கான ஆக்கி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. இப்போட்டிகளை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார்.

இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

கழிவறையில் ஊசிகள்

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்துகின்றனர். நேற்று காலை கழிவறை பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்தன. அந்த ஊசிகளை பயன்படுத்தியவர்கள் அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல், கழிவறை மற்றும் மக்கள் நடமாடும் பகுதிகளிலேயே வீசிச்சென்று உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு சென்று பார்வையிட்டார். மேலும் தல்லாகுளம் போலீசிலும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு, அங்கு கிடந்த 7 ஊசிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஊக்க மருந்தா?

விளையாட்டு வீரர்களுக்கான கழிவறைகளில் இந்த ஊசிகள் கிடப்பதற்கான காரணம் என்ன? அவற்றை யார் பயன்படுத்தியது? ஊக்க மருந்து ஊசிகளா? அல்லது வேறு மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும், விளையாட்டு மைதான வளாகத்தை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம் வடக்கு- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்
திருச்சி,

பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருச்சி வழியாக திருவனந்தபுரம் வடக்கு- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரெயில்

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கு- தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06164) திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரெயில் திருச்சிக்கு 21-ந்தேதி அதிகாலை 4.40 மணிக்கு வந்து 4.50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

மறு மார்க்கத்தில் தாம்பரம்- திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் -06163) வருகிற 21-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலானது திருச்சிக்கு 21-ந் தேதி இரவு 7.35 மணிக்கு வந்து 7.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்களில் 16 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டிகள், 2 தூங்கும் வசதி பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.

தொடர் விடுமுறை: விதி மீறலில் ஈடுபட்ட 391 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
சென்னை,

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, வரி கட்டாமை உள்ளிட்ட விதிமீறல்களுக்காகவும் ஆம்னி பஸ்கள் மீது தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று 2-வது நாளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது தமிழகம் முழுவதும் 1,970 பஸ்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு விதி மீறல்களில் ஈடுபட்ட 391 பஸ்களுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வரித் தொகையாக ரூ.37 லட்சத்து 99 ஆயிரத்து 341 வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக 3 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நேற்று முன்தினம் நடைபெற்ற வாகன சோதனையில் 207 ஆம்னி பஸ்களுக்கு ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டு 'இ-சலான்' வழங்கப்பட்டுள்ளது. மேலும், 4 பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறுஞ்செய்தி மூலம் நூதன மோசடி - பெண் ஊழியரிடம் ரூ.1.68 லட்சம் அபேஸ்!
சேலம்,

கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியரிடம், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 800 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிசு தருவதாக குறுஞ்செய்தி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு, தங்கள் பகுதியில் உள்ள சிறந்த ஓட்டல் குறித்த தகவலைத் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் எனக் கூறி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதை நம்பிய அந்தப் பெண், குறிப்பிட்ட ஓட்டலின் பெயரைப் பதிலாக அனுப்பியுள்ளார்.

ரூ.380 அனுப்பி நம்பவைத்த மர்ம நபர்கள்

இதையடுத்து, அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு ரூ.380 அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதே செல்போன் எண்ணில் இருந்து முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய அந்தப் பெண், பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 800-ஐ அனுப்பியுள்ளார்.

செல்போன் எண் சுவிட்ச்-ஆப்

பணத்தை அனுப்பிய பிறகு, குறுஞ்செய்தி வந்த செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து அவர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்-எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு ரெயில்கள்

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி, தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06164), மறுநாள் காலை 11 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 21-ந்தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06163), மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடையும்.

* நாகர்கோவிலில் இருந்து வருகிற 20-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரெயில் (06144), மறுநாள் காலை 9.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையை புரட்டிப்போட்ட மழை: இன்றும் கொட்டப்போகும் கனமழை; எங்கெல்லாம் தெரியுமா..?
சென்னை,

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (ஞாயிறு) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை, தமிழ்நாட்டில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அதிலும் கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது. இவ்வளவு நாள் வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமாக இந்த மழை இருந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் பல இடங்களில் மழை கொட்டியது. அதன்தொடர்ச்சியாக நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும், நேற்று முன்தினம் போலவே மாலையில் கருமேகங்கள் சூழ தொடங்கி மழை கொட்டத்தொடங்கியது. எப்போதும் போல பெய்யாமல் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருந்தது.

ஆறுபோல ஓடிய மழைநீர்

மேகவெடிப்பின் காரணமாக சில பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய 'எக்ஸ்' தள பக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அதை மேக வெடிப்பினால் ஏற்படும் மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

அந்த வகையில் நேற்று வடசென்னைக்கு உட்பட்ட கார்கில் நகரில் 10.9 செ.மீட்டரும், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 செ.மீ. மழையும் கொட்டியது.

இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மழைநீர் ஆறுபோல ஓடியது. சில தெருக்களில், தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது.

மிக கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறையா..?

இதற்கிடையே இனி வரும் நாட்களிலும் பருவமழை தீவிரம் அடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதன்படி, வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் மற்றும் முதல் சுற்று மழை வருகிற 25-ந் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் நீடிக்கும் காற்று சுழற்சியால் நாளை (திங்கட்கிழமை) வரை பகலில் வெயில் அடித்தாலும் மாலை, இரவு, நள்ளிரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பதிவாகும் என்றும், அந்த காற்று சுழற்சி 20-ந்தேதி தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியில் மையம் கொண்டு, வலுவான காற்று சுழற்சியாகவோ, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ வலுபெற வாய்ப்பு இருக்கிறது என்றும், அதன் காரணமாக வருகிற 21, 22 மற்றும் 23-ந்தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மழையை தீவிரப்படுத்தும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதில் 21, 22-ந் தேதிகளில் வடகடலோரம் டெல்டாவில் கன முதல் மிக கனமழை வரை கொட்டக்கூடும் எனவும், இந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கான சூழல் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

முதல் சுற்று தீவிரம்

பின்னர் இந்த நிகழ்வு, 23-ந் தேதி தமிழ்நாட்டின் வழியாக நகர்ந்து கேரளாவையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் வருகிற 25-ந் தேதி வரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று தீவிரம் அடைந்து காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.

சென்னையில் நேற்றிரவு 7 மணி முதல் 10.30 மணி வரையிலான 3 மணி நேரத்தில் பாரிமுனையில் 26.83 செ.மீட்டரும், திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட கத்திவாக்கம் பகுதியில் 26.4 செ.மீட்டரும், சாத்தாங்காடு பகுதியில் 22.2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

திருவொற்றியூர், கார்கில் நகர், எண்ணூர், தண்டையார்ப்பேட்டை போன்ற வடசென்னை பகுதியில் அதிக மழை பெய்துள்ளது.

17 மாவட்டங்களில் இன்று கனமழை

இன்று (18-10-2026): நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மிச்சாங் புயலுக்குப் பிறகு சென்னை கண்ட மிக அதிக மழை

டிசம்பர் 2023-க்குப் பிறகு சென்னையில் பதிவான மிக அதிக மழை இதுவாகும் என்று சென்னை வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட மிச்சாங் புயலுக்குப் பிறகு சென்னை கண்ட மிக அதிக மழை இதுவாகும். அந்தப் புயல் ஒரே நாளில் சுமார் 400–450 மி.மீ. மழையைப் பொழிந்தது.

கிட்டத்தட்ட 25 வறண்ட நாட்களுக்குப் பிறகு, வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்துடன் பெய்த இந்த மழை, இந்த காலகட்டத்தை மேலும் சிறப்பானதாக ஆக்குகிறது.

இன்றைய நிகழ்வு என் நாட்குறிப்பில் ஒரு சிறப்புப் பதிவாக அமையும். மழையை விரும்புபவர்களுக்கு சில மழை நாட்கள் மறக்க முடியாதவை; அவற்றை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்போம். இன்று நிச்சயமாக அத்தகைய நாட்களில் ஒன்றாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rainfall recorded till 1:30 AM - Chennai's heaviest rainfall since December 2023

This is the heaviest rainfall Chennai has witnessed since Cyclone Michaung in December 2023, which brought around 400–450 mm of rain in a day.

After nearly 25 dry days, these rains arriving with the onset of the Northeast Monsoon make this spell even more special.

Today event will have a special entry in my diary. Certain rainy days are unforgettable for pluviophiles, we remember them for a lifetime and today is certainly one of them.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 17, 2026

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7 டெண்டர்கள் ரத்து
சென்னை,

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7 டெண்டர்கள் ரத்து செய்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நெடுஞ்சாலை ஆணையம்

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம், கடந்த தி.மு.க. ஆட்சியில், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் பயணிகளுக்காகச் சாலையோர வசதிகள் மையங்களை செயல்படுத்தத் திட்டமிட்டது.

இதன்படி, வடிவமைத்தல், கட்டமைத்தல், நிதியளித்தல், இயக்குதல் மற்றும் பின்னர் ஒப்படைத்தல் அடிப்படையில் வசதி மையங்களை விழுப்புரம், திருப்பூர், திருவள்ளூர், திருப்பத்தூர், சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் அமைக்க முடிவு செய்து, டெண்டர் கோரியது. இந்தச் சூழலில், நிர்வாகக் காரணங்களுக்காக விதிமுறைகளின் பிரிவு 2.5.1-ன் கீழ் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில்

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் வசதிக்காக உணவகங்கள், ஓய்வறைகள் மற்றும் வாகனப் பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றைத் தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கும். திட்டத்தின் மதிப்பு மற்றும் திட்டத்தை ரத்து செய்ததற்கான காரணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவான விவரங்கள் இல்லை. இருப்பினும், நிர்வாகக் காரணம் எனக் கூறி ஏற்கனவே பலமுறை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட டெண்டர்களை ரத்து செய்துள்ளது.

7 மாவட்டங்களில்

இந்தநிலையில், தற்போது 7 மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் சாலையோர வசதிகளை அமைப்பதற்கான டெண்டர்களையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விதிகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

த.வெ.க. 3-வது மாநில மாநாடு: முதற்கட்ட பணிகள் தொடக்கம் - திருச்சியா..? நெல்லையா..?
சென்னை,

த.வெ.க. 3-வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

த.வெ.க.

தமிழ் திரையுலகில் உச்ச நடிகரான விஜய் கடந்த 2024-ம் ஆண்டு த.வெ.க. என்ற கட்சியை தொடங்கினார். அதே ஆண்டில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி தமிழகத்தின் ஒட்டு மொத்த பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடிய அந்த மாநாடு இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறி போனது.

முதல்-அமைச்சராக விஜய்

தொடர்ந்து மதுரையில் 2-வது மாநாட்டை நடத்தினார். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலையும் சந்தித்த விஜய், மகத்தான வெற்றியை அரசியல் அரங்கில் பதிவு செய்தார். த.வெ.க. ஆட்சியை பிடித்தது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.

திருச்சி அல்லது நெல்லை

சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்று, மக்கள் தங்கள் பக்கம் என்பதை நிரூபித்துக் காட்டியது. இந்தநிலையில், கட்சியின் 3-வது மாநாட்டை, வெற்றி மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. த.வெ.க.வின் 3-வது ஆண்டு தொடக்கம், தேர்தல் வெற்றி, முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3-வது மாநாடு நடக்க இருப்பதாகவும், இந்த மாநாட்டுக்கு 'வெற்றி மாநாடு' என்று பெயர் சூட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாணவர்களுக்கு பரிசுகள்

கடந்த சில ஆண்டுகளாக த.வெ.க. சார்பிலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு விழா விரைவில் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு
சென்னை,

சென்னையில் நேற்று மழை வெளுத்துவாங்கியது. ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை, தமிழ்நாட்டில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அதிலும் கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் பல இடங்களில் மழை கொட்டியது. அதன்தொடர்ச்சியாக நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும், நேற்று முன்தினம் போலவே மாலையில் கருமேகங்கள் சூழ தொடங்கி மழை கொட்டத்தொடங்கியது. எப்போதும் போல பெய்யாமல் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருந்தது.

மேகவெடிப்பின் காரணமாக சில பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அதை மேக வெடிப்பினால் ஏற்படும் மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும், சென்னைக்கு வரும் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் ஐதரபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை: சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
சென்னை,

வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து சேவைதுறை அலுவலர்களை ஒருங்கிணைந்து, பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

அதன் விவரம் மண்டலம்- கண்காணிப்பு அதிகாரிகள் பெயர் செல்போன் எண் வாரியாக வருமாறு:-

திருவொற்றியூர்

1. திருவொற்றியூர்-இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கே.பாலசுப்பிரமணியம்- 89255 46901

2. மணலி- தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர் பி.குமாரவேல் பாண்டியன்- 89255 46902

3. மாதவரம்- சர்க்கரை இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர் எஸ்.அருண் - 89255 46903

4. தண்டையார்ப்பேட்டை- சர்க்கரை துறை ஆணையர் ஆர்.கண்ணன்-89255 46904

5. ராயபுரம்- சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இயக்குனர் ஆஷா அஜித்- 89255 46905

திரு.வி.க.நகர்

6. திரு.வி.க.நகர்- புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பி.கணேசன்- 89255 46906

7. அம்பத்தூர்- தொழில்கள் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை சிறப்பு செயலாளர் கே.விவேகானந்தன் 89255 46907

8. அண்ணாநகர்- சமூக பாதுகாப்பு திட்டங்கள் இயக்குனர் பி.காயத்ரி-89255 46908

9. தேனாம்பேட்டை- நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனர் டி.கிறிஸ்துராஜ் 89255 46909

10. கோடம்பாக்கம்- நில நிர்வாக கூடுதல் ஆணையர் எஸ்.கோபால சுந்தரராஜ் - 89255 46910

வளசரவாக்கம்

11. வளசரவாக்கம் தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறை இயக்குனர் ஜெ.விஜயராணி- 89255 46911

12.ஆலந்தூர்- தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வாகே சங்கேத் பல்வந்த்- 89255 46912

13. அடையார்- ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் டாக்டர் கே.செந்தில் ராஜ் - 89255 46913

14. பெருங்குடி- சென்னை கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் மகேஸ்வரி ரவிக்குமார்- 89255 46914

15. சோழிங்கநல்லூர்- சென்னை அருங்காட்சியக இயக்குனர் டி.பாஸ்கரபாண்டியன் 89255 46915

இதே போன்று மண்டல வாரியாக மண்டல அலுவலர்களும், சென்னை வடக்கு, மத்தியம், தெற்கு வட்டார துணை ஆணையாளர்களும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 4 மணி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை

சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

சுமார் 5.8 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கனமழை

இந்நிலையில் அதிகாலை 4 மணி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம். கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு தீவிர வாகனத் தணிக்கை
சென்னை,

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்கள்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, 15.10.2026 வியாழக்கிழமையிலிருந்து, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 15.10.2026 மாலை முதல் 17.10.2026 காலை வரை தமிழ்நாடு முழுவதும் 4233 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு அறிக்கை மற்றும் தணிக்கை இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதிகக் கட்டணம்

இந்த தீவிர தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்கக் கட்டணம் ரூ.14,38,200/- நிர்ணயிக்கப்பட்டும், மற்றும் இணக்கக்கட்டணம் (Spot Fine) ரூ.3,83,500/- வசூலிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருந்து தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.54,78,073/- வசூலிக்கப்பட்டது.

மேற்கண்ட தணிக்கையில் கடந்த இரண்டு தினங்களில் அதிகக் கட்டணம் (Excess Fare) வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக 6 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு வாகனத் தணிக்கை

ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

இதனை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 35 சிறப்பு தணிக்கைக் அமைத்து உத்தரவிடப்பட்டு நடவடிக்கை குழுக்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கட்டணமில்லா தொலைபேசி

புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்:18004256151

புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து மீது போக்குவரத்து துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 35 சிறப்பு தணிக்கைக் குழுக்கள் அமைத்து தொடர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15.10.2026 மாலை முதல் 17.10.2026 காலை வரை தமிழ்நாடு முழுவதும் 4233 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன.

விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான்கள் வழங்கப்பட்டது.

அதிகக் கட்டணம் வசூலித்த மற்றும் பிற குற்றங்களுக்காக 7 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மேகவெடிப்பு? - வெளுத்து வாங்கும் கனமழை
சென்னை,

சென்னையில் கத்திவாக்கம், பாரிமுனை மற்றும் திருவொற்றியூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

வளிமண்டல சுழற்சி

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

சுமார் 5.8 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கனமழை

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

மேகவெடிப்பு

குறிப்பாக சென்னையில் அதிகமழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் இன்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை  உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். மேலும் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கத்திவாக்கம், பாரிமுனை மற்றும் திருவொற்றியூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 3 மணி நேரத்தில் மேகவெடிப்பு போன்ற மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் கத்திவாக்கத்தில் 26 செ.மீ., பாரிமுனை 25.5 செமீ, திருவெற்றியூர் 15 செ.மீ, தண்டையார்பேட்டை 10 செ.மீ, எண்ணூர் 9 செ.மீ, மணலி 9 செ.மீ, மாதாவரம் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தற்போது மேகங்கள் தென்சென்னையை நோக்கியும் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தென்காசி: மூதாட்டியை கொன்று நகைகள் திருட்டு; வாலிபர் கைது
தென்காசி,

தென்காசி மாவட்டம், கடையம் அருகே 77 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி

தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமச்சந்திரபுரம், வயக்காட்டூர் பகுதியில் வசித்து வந்த ஜானகி (வயது 77), கணவர் காலமான நிலையில் தனது வளர்ப்பு மகன் சிவராமனுடன் வசித்து வந்தார்.

கொலை; நகைகள் திருட்டு

நேற்று சிவராமன் வழக்கம்போல் காலையில் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜானகியைத் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டிலிருந்த நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிவராமன், தனது தாயார் தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

வாலிபர் கைது

இச்சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட எஸ்.பி.யின் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைக்கபட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஜானகி வீட்டில் கட்டுமானப் பணிக்காக வந்துசென்ற கீழகுத்தப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த கணேசன்(30) என்பதும், விசாரணையில் கணேசன் மூதாட்டியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட நகைகளை மறைத்து வைத்திருந்ததும், காதணிகளை ஆலங்குளத்தில் உள்ள  நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

97 கிராம் நகைகள் மீட்பு

இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்து, அவரிடமிருந்து 97 கிராம் தங்க நகைகளை கைப்பற்றினர். குற்றவாளியை விரைந்து கைது செய்து திறம்பட செயல்பட்ட போலீசாரை மாவட்ட எஸ்.பி. அசோக்குமார் அவர்கள் பாராட்டினார்.

தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 3 பேர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 16-ம் தேதி பதிவான இந்த வழக்கில், கயத்தாறைச் சேர்ந்த காசிப்பாண்டி (வயது 22), திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(23) மற்றும் தாழையூத்தைச் சேர்ந்த ராஜகோபால்(23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

இவர்களது தொடர் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜமிதா தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குச் சென்று, அங்கிருந்த காசிப்பாண்டி, ரமேஷ், ராஜகோபால் ஆகிய 3 பேரிடமும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான அரசாணையை நேரில் வழங்கினர்.

போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது இதுபோன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு
சென்னை,

திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா – முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஆய்வு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில், விரைவில் நடைபெறவுள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு நானும், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் இணைந்து இன்று திருவண்ணாமலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம்.

ஆலோசனை கூட்டம்

லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கிரிவல பாதையில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், திருக்கோயிலில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

அன்னதான உணவு தரம் ஆய்வு

ஆய்வின்போது, பக்தர்களுடன் இணைந்து அன்னதானத்தில் பங்கேற்று உணவு அருந்தியதுடன், அதன் தரத்தையும் ஆய்வு செய்தோம். மேலும், உள்ளூர் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முதற்கட்ட ஆய்வு

எதிர்காலத்தில் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, கிரிவலப் பாதை மேம்படுத்துதல், தங்குமிட வசதிகள், குடிநீர், கழிவறைகள், உணவுக் கூடங்கள் மற்றும் அன்னதான திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வுகளை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

வசதிகள் தொடர்ந்து மேம்படுத்துவோம்

முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கோவில்களுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஐந்து ஆண்டுகளிலும் தமிழ்நாட்டின் கோவில்களில் தேவையான வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவோம்.

அண்ணாமலையார் திருவருளால், கார்த்திகை தீபப் பெருவிழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழா – முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், விரைவில் நடைபெறவுள்ள திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபப் பெருவிழாவை முன்னிட்டு
நானும், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களும் இணைந்து இன்று திருவண்ணாமலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கிரிவலப் பாதையில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், திருக்கோயிலில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

ஆய்வின்போது, பக்தர்களுடன் இணைந்து அன்னதானத்தில் பங்கேற்று உணவு அருந்தியதுடன், அதன் தரத்தையும் ஆய்வு செய்தோம். மேலும், உள்ளூர் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு, கிரிவலப் பாதை மேம்படுத்துதல், தங்குமிட வசதிகள், குடிநீர், கழிவறைகள், உணவுக் கூடங்கள் மற்றும் அன்னதானத் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வுகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஐந்து ஆண்டுகளிலும் தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் தேவையான வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்.

அருள்மிகு அண்ணாமலையார் திருவருளால், கார்த்திகை தீபப் பெருவிழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

@CMOTamilnadu | @TVKVijayHQ | @AadhavArjuna
— TVK Ramesh (@RameshOffcl) October 17, 2026

மாணவரின் காப்புக்கயிறு அறுக்கப்பட்ட சம்பவம்: பள்ளி தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி,

ஆத்தூரில் மாணவரின் கையில் கட்டப்பட்டிருந்த தசரா காப்புக்கயிறை அறுத்து எறிந்த தனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

10-ம் வகுப்பு மாணவர் கையில் காப்புக்கயிறு

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பெத்தநாச்சியம்மன் நகரைச் சேர்ந்த 15 வயது மாணவர், ஆத்தூரிலுள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் சில தினங்களுக்கு முன்னர் குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்து தன் கையில் காப்புக்கயிறு கட்டியிருந்தார்.

பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

இந்த நிலையில் பள்ளியில் மாணவரின் கையில் காப்புக்கயிறைக் கண்ட தலைமையாசிரியர் பிலிப்எமர்சன் ரஞ்சித்சிங், அவரது கையில் கட்டியிருந்த காப்புக்கயிறை அறுத்து எறிந்துள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து கடந்த 13-ம் தேதி பாதிக்கப்பட்ட மாணவ-மாணவியரின் பெற்றோர் மற்றும் இந்து அமைப்பினர் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

போலீசில் புகார்

இதற்கிடையில் மாணவனின் தாயார் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், மாணவனை அசிங்கமாகத் திட்டியது, தாக்கியது மற்றும் அவரது மத நம்பிக்கையை அவமதித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இதன் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் பிலிப்எமர்சன் ரஞ்சித்சிங் மீது ஆத்தூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன்முனியசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: யூடியூபர்களால் பக்தர்களுக்கு இடையூறு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி தினந் தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்யும் அதே நேரத்தில் 'ரீல்ஸ்' மோகம் கொண்ட யூடியூபர்கள், இன்ஸ்டா பிரபலங்கள் பலரும் பக்தர்களுக்கு இடையூறாக முண்டியடித்துக் கொண்டு அம்மனை வீடியோ எடுக்க குவிகின்றனர். அவர்கள் மற்ற பக்தர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் செல்போன்களை தூக்கிப்பிடித்து அம்மனை மறைத்துக்கொண்டு 'ரீல்ஸ்' எடுக்கின்றனர். அதனை சமூக வலைதளங்களில் பதி விட்டு 'லைக்குகளை' அள்ளி வருகின்றனர்

லைக்குகளை அள்ளுகிறார்கள்

அவர்கள் மற்ற பக்தர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் செல்போன்களை தூக்கிப்பிடித்து அம்மனை மறைத்துக்கொண்டு 'ரீல்ஸ்' எடுக்கின்றனர். அதனை சமூக வலைதளங்களில் பதி விட்டு 'லைக்குகளை' அள்ளி வருகின்றனர்

பக்தர்களுக்கு இடையூறு

தினமும் இரவில் முத்தாரம்மன் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்திருளி வீதி உலா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா புறப்பாட்டின்போது யூடியூபர்கள் செல்போனை தூக்கி பிடித்த வாறு வீடியோ எடுத்து கொண்டு பக்தர்களை சாமி தரிசனம் செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தினர். எனவே இதனை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகத்தினரும், போலீசாரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில்  கட்சியின் சட்டசபை கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று வேலுமணி ஒரு கருத்தை கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் எவ்வாறு இணைப்பது?

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி தி.மு.க.வில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் தினகரன் அ.ம.மு.க. என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, அதன் பொதுச்செயலாளராக இருக்கிறார். சசிகலா தனி கட்சியைத் தொடங்கியுள்ளார். இப்படிபட்ட சூழலில் அவர்களை அ.தி.மு.க.வில் எவ்வாறு இணைப்பது? காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வேலுமணி இது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார்.

தனிப்பட்ட விமர்சனம்

வேலுமணி தலைமையிலான நிர்வாகிகள் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் என்கிறார்கள். அப்படி என்றால் ஏன் அவர்கள் த.வெ.க.வை ஆதரிக்க வேண்டும்?சட்டசபையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நிலைப்பாடுக்கு எதிராக ஏன் த.வெ.க. அரசை ஆதரித்து ஓட்டு போட வேண்டும்? 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கருத்தின் அடிப்படையில்தான் பா.ஜனதா கூட்டணி வேண்டாம் என்று நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

பா.ஜனதாவோடு கூட்டணி வேண்டாம் என்று அப்போது முதலில் குரல் கொடுத்தவர் வேலுமணிதான். அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அப்படி இருக்கும் போது அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தவே தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அடையாறில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் குமார் ஆய்வு
சென்னை,

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், அடையாறு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக. வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை

இன்று செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா. குமார், அடையாறு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளை பார்வையிட்டு ஆய்வு

அமைச்சர், அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட பெரியார் நகர், இரங்கராஜபுரம் பகுதியில் குப்பைகள் அகற்றுவது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, வார்டு-178க்குட்பட்ட வேளச்சேரி பிரதான சாலையில், மழைநீர் வடிகாலுக்கு அருகில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) மேற்கொண்டு வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெருங்குடி எம்.ஆர்.டி எஸ். சாலை, உதயா நகர் பகுதியில் உள்ள ஏரியில் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் விடுத்த கோரிக்கை

பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் உதய நகர், கல்லுக்குட்டை ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டதை பார்வையிட்டார். பின்னர், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, பவானி தெருவில் பொதுமக்கள் குப்பைகளை அகற்றுவது தொடர்பான கோரிக்கைகள் வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் குப்பைகளை அகற்றுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பெருங்குடி 6 மதகுகள்

மேலும், வார்டு-177க்குட்பட்ட வேளச்சேரி எம்.ஆர்.டி எஸ். சாலையில் உள்ள பெருங்குடி 6 மதகுகள் கல்வெர்ட்டினையும், பெருங்குடி - வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலைய சாலையில் 6 மதகுகள் பாலத்திற்கு அருகிலுள்ள நீரேற்று நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அறிவுறுத்தல்

இந்த ஆய்வுகளின்போது, அமைச்சர், ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் வண்டல்களை தூர்வாரி அகற்றிடவும், சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றிடவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மண்டல அலுவலர் என்.தட்சணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
சென்னை,

ரெயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதன்படி, திருவனந்தபுரம் வடக்கு-மங்களூரு, திருவனந்தபுரம் வடக்கு-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்களும், நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே ஒரு வழி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவனந்தபுரம் - மங்களூரு சிறப்பு ரெயில்

ரெயில் எண் 06155 திருவனந்தபுரம் வடக்கு–மங்களூரு சிறப்பு ரெயில் அக்டோபர் 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு மங்களூரு சந்திப்பைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், ரெயில் எண் 06156 மங்களூரு சந்திப்பு-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் அக்டோபர் 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.15 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11.45 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடையும்.

இந்த ரெயில்களில் 2 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 3 மூன்றடுக்கு ஏ.சி. எகனாமி பெட்டிகள், 6 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 2-ம் வகுப்பு பெட்டி மற்றும் சரக்கு-பிரேக் வேன் ஆகியவை இடம்பெறும்.

திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரெயில்

ரெயில் எண் 06164 திருவனந்தபுரம் வடக்கு-தாம்பரம் சிறப்பு ரெயில் அக்டோபர் 20-ந்தேதி இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், ரெயில் எண் 06163 தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் அக்டோபர் 21-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடையும்.

இந்த ரெயிலில் 16 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 படுக்கை வசதி பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 2-ம் வகுப்பு பெட்டி மற்றும் சரக்கு-பிரேக் வேன் ஆகியவை இடம்பெறும்.

நாகர்கோவில் - எழும்பூர் ஒருவழி சிறப்பு ரெயில்

ரெயில் எண் 06144 நாகர்கோவில்-சென்னை எழும்பூர் ஒருவழி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் அக்டோபர் 20-ந்தேதி இரவு 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.55 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

இந்த ரெயிலில் 2 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிகள், 6 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 9 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 சரக்கு-பிரேக் வேன்கள் இடம்பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தை அழித்த கொரோனா காலம் - சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
சென்னை,

கொரோனா பெருந்தொற்று காலம் மனித உயிர்களை மட்டுமின்றி, கணவன்-மனைவி இடையேயான திருமண பந்த அமைப்பையும் வேரோடு அழித்துவிட்டதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

சில மாதங்களில் பிரிவு

கடந்த 2019 முதல் 2022 வரை கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டவர்களின் குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு, வெறும் 6 முதல் 9 மாதங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்துவிட்டு பிரிந்தார்கள்.

குணங்கள் வெளிப்பட்டன

லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தபோது, மக்களின் நல்ல மற்றும் மோசமான குணங்கள் தங்களுக்குள் வெளிப்பட்டுள்ளன. இதுவே தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. மனித உயிர்களை பறித்தது மட்டுமின்றி, பலரின் திருமண வாழ்வையும் இந்த கொரோனா காலம் சிதைத்துள்ளது.

தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டும்: துரை வைகோ எம்.பி
கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை என்றால் இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. டெபாசிட் இழந்திருக்கும் என்று துரை வைகோ எம்.பி. அளித்த பேட்டியில் கூறினார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி.   திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தோல்வியை ஏற்கவேண்டும்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் திருப்திகரமாக நடந்து முடிந்தன என கூறினார். ஆனால் இப்போது தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு காரணமே எஸ்.ஐ.ஆர். திருத்தப்பணிகள் தான் என்று பேசி வருகிறார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற வேண்டும்.மக்கள் தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். பெருந்தலைவர் காமராஜர், நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் தேர்தலில் தோற்ற போது அதனை ஏற்றுக்கொண்டார்கள். அதே போன்று ஸ்டாலின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய அரசு பற்றியும், முதல் -அமைச்சர் விஜய் பற்றியும் கொச்சையாக பேசி வருவது ஏற்புடையது அல்ல.

டெபாசிட் இழந்திருக்கும்

நடந்து முடிந்துள்ள தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈசுவரன், த.மு.மு.க. தலைவர் ஜவாகிருல்லா போன்றவர்கள் எல்லாம் பிரசாரம் செய்தார்கள். இதன் காரணமாக தான் தி.மு.க. இரண்டாவது இடத்திற்கு வந்து உள்ளது. இவர்கள் ஆதரித்து பேசவில்லை என்றால் தி.மு.க .வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்திருப்பார்கள்.

மேலும் இடைத்தேர்தலில் தி.மு.க. நேரடியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றாலும், கிராமங்களில் கோவிலுக்கு செய்கிறோம், அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என கூறி ரூ.100 கோடி வரை செலவிட்டு இருக்கிறார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.

பூஜைப் பொருட்கள் வாங்க கோயம்பேட்டில் குவிந்த மக்கள்!
சென்னை,

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூஜைப் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். வாழைமரம், பூசணிக்காய், தேங்காய், பூக்கள், கரும்பு உள்ளிட்ட பூஜைக்குத் தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

தமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகை வருகிற 19-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், வாகனங்கள் மற்றும் தொழிலுக்குத் தேவையான பொருட்களை வைத்து மக்கள் வழிபாடு நடத்துவார்கள். அதேபோல், கல்வி மற்றும் கலைகளின் தெய்வமாகக் கருதப்படும் சரஸ்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

பூஜைப் பொருட்கள்

இந்தப் பண்டிகைகளை முன்னிட்டு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களைச் சுத்தம் செய்து அலங்கரிக்கும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக சந்தைகளுக்கும் கடைகளுக்கும் சென்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை கோயம்பேடு சந்தையில் பூஜைப் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் திரண்டனர். பூஜையில் முக்கிய இடம் பெறும் வாழைமரம், பூசணிக்காய், தேங்காய், பூக்கள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

வீடுகளின் நுழைவாயிலில் வாழைமரம் கட்டி, பூக்களால் அலங்கரித்து, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபாடு நடத்துவதற்காகப் பொதுமக்கள் தேவையான பொருட்களைத் தேர்வு செய்து வாங்கினர். கடைகள் மற்றும் அலுவலகங்களில் பூஜை நடத்துவதற்கான பொருட்களை வாங்குவதற்கும் பலர் சந்தைக்கு வந்திருந்தனர்.

பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பொதுமக்களின் வருகை அதிகரித்ததால் சந்தைப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

திருப்பூரில் நாய் கண்காட்சி
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட நாய் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.

பாரம்பரிய நாய்கள் அணிவகுப்பு

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை சிகிச்சை வளாகம் சார்பில் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடைபெற்ற நாட்டு நாய் இனங்கள் கண்காட்சியில், தமிழகத்தின் பெருமைகளான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நாய் இனங்கள் கம்பீரமாக அணிவகுத்து நின்றன. பார்ப்பவர்களைக் சுண்டி இழுக்கும் வகையில் அமைந்த இக்கண்காட்சியில் மொத்தம் 30 நாய் இனங்கள் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தன.

சான்றுகள்

இவற்றில் சிறந்த நாய் இனங்களை நடுவர் குழுவினர் மிக துல்லியமாக மதிப்பீடு செய்து தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு சான்றுகளும், கோப்பைகளும் அள்ளி வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக, வெறிநோய் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, வெறிநோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வீதி வீதியாகச் சென்று பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

154 பிராணிகளுக்கு தடுப்பூசி

இதனை தொடர்ந்து செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் நாய் வளர்ப்பவர்கள் தங்களது செல்லப் பிராணிகளை ஆர்வமுடன் அழைத்து வந்தனர். அதன்படி, 128 நாய்கள் மற்றும் 26 பூனைகள் என மொத்தம் 154 செல்லப் பிராணிகளுக்குப் பாதுகாப்பான முறையில் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

விழிப்புணர்வு கண்காட்சி

மேலும், செல்லப் பிராணிகளின் முறையான உணவு பழக்கம், ஊட்டச்சத்து தேவைகள், அன்றாட பராமரிப்பு மற்றும் கொடிய நோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியும் அங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தது. இதனை 920 பள்ளி, கல்லூரி மாணவர்களும், 280-க்கும் மேற்பட்ட செல்லப் பிராணி வளர்ப்பாளர்களும் நேரில் பார்வையிட்டுப் பயன் பெற்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினாவில் நிறுத்தப்பட்டு உள்ள மிதவை கப்பல்
சென்னை

மேற்கு வங்காளம் நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னை மெரினாவில் மிதவை கப்பல் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான மிதவை கப்பல் ஒன்று சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளது.  இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு சமீபத்தில் கோவாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னையில் ஓய்வு

மேற்கு வங்காளத்தில் ஹல்தியா நகரில் உள்ள தன்னுடைய சொந்த துறைமுகத்திற்கு அது சென்று கொண்டிருக்கிறது.  வழியில் ஓய்வுக்காக, சென்னையில் தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்பட்டு உள்ளது.  ஓய்வுக்கு பின்னர் மீண்டும் ஹல்தியா நோக்கிய அதன் பயணம் தொடரும்.

கடலோர கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், பேரிடர் மேலாண்மை போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.  இந்த மிதவை கப்பல், நீரின் மீதும், சேறு போன்ற பகுதிகளிலும் கூட பயணிக்கும் திறன் பெற்றது.

7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
சென்னை,

சென்னை கிண்டி பகுதியில் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

கிரேன் ஆபரேட்டர்

சென்னை கிண்டி அண்ணா சாலையில், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் 13 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திலோசன் (வயது 36) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

நேற்று முன்தினம் இரவு, திலோசன் மதுபோதையில் அந்த கட்டிடத்தின் 7-வது மாடியில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக அவர் 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த திலோசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உதவி கலெக்டர் ,தாசில்தாருடன் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஏரல்,

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கண்மாயில் நேற்று சிலர் 3 பொக்லைன் எந்திரம் மூலமாக கரம்பை மண்ணை அள்ளி ஒரு டிராக்டரில் ஏற்றி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் உதவி கலெக்டர் கௌதம், ஏரல் தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் முத்துமாரி, கிராம நிர்வாக அதிகாரி காளிராஜ் மற்றும் வருவாய்துறையினர் அந்த கண்மாய்க்கு சென்று, கரம்பை மண் ஏற்றி சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். மேலும், கண்மாயில் இருந்த 3 பொக்லைன் எந்திரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை ஏரல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உதவி கலெக்டரிடம்எம்.எல்.ஏ. வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னை வி.ஜி. சரவணன் எம்.எல்.ஏ. அந்த கண்மாய்க்கு சென்றார். அங்கு இருந்த உதவி கலெக்டரிடம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கண்மாய் தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால் இங்கு அதிக அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாததால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. அதிகாரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விவசாயிகளே தூர்வாரி அந்த மண்ணை நிலத்தில் கொண்டு பயன்படுத்த எடுத்து செல்கிறார்கள். விவசாயிகள் தங்கள் தேவைக்காக மண் எடுக்க ஏன் நீங்கள் தடை விதிக்கிறீர்கள்? என்றவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு பதிலளித்த உதவி கலெக்டர், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கண்மாய்களுக்கும், கரைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் நீர்வளத்துறை மண் அள்ள தடை விதித்துள்ளது. அந்த உத்தரவை மீறி மண் அள்ளியதால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கனிம வளங்களை எடுப்பதற்கு சட்ட விதிமுறைகள் உள்ளதால் அவற்றை பின்பற்றியே அனுமதி வழங்க முடியும், என்றார். இதை தொடர்ந்து அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

பின்னர் அதிகாரிகள் காரில் ஏறி புறப்பட்டனர். அந்த காரை அங்கிருந்த விவசாயிகள் முற்றுகையிட்டனர். அவர்களை ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, சப்- இன்ஸ்பெக்டர் கபில்தேவ் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.மேலும், கண்மாயில் கரம்பைமண் அள்ளியது குறித்து தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.500 நோட்டுகளால் ஆன மாலை அணிவிக்க முயன்ற தொண்டர்... திருப்பிக் கொடுத்த எல்.முருகன்!
சென்னை,

மத்திய இணை மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பிய எல்.முருகனுக்கு, விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தொண்டர் ஒருவர் ரூ.500 நோட்டுகளால் ஆன மாலையை அணிவிக்க முயன்றபோது, அதனை ஏற்க மறுத்த எல்.முருகன், மாலையைத் திருப்பிக் கொடுத்த சம்பவம் கவனம் பெற்றது.

சென்னை திரும்பிய எல்.முருகன்

மத்திய இணை மந்திரி பதவியை ராஜினாமா செய்த எல்.முருகன் சென்னை திரும்பினார். அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர் விமான நிலையத்திற்கு வந்ததும், தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

பண மாலையை அணிவிக்க முயற்சி

இந்த வரவேற்பின்போது, தொண்டர் ஒருவர் ரூ.500 நோட்டுகளால் தயாரிக்கப்பட்ட மாலையை எல்.முருகனுக்கு அணிவிக்க முயன்றார். இதைக் கவனித்த எல்.முருகன், அந்த மாலையை அணிய மறுத்து, அதைத் தடுத்தார்.

தொண்டரிடமே திருப்பிக் கொடுத்தார்

தொடர்ந்து, அந்தத் தொண்டர் கொண்டு வந்திருந்த பையிலேயே பண மாலையை வைத்த எல்.முருகன், அதனை அவரிடமே திருப்பிக் கொடுத்து அனுப்பினார். விமான நிலைய வரவேற்பின்போது நடைபெற்ற இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் சினிமா பாடல்களுக்கு தடை: கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பேண்ட் செட், நவீன இசைக்கருவிகளைக் கொண்டு சினிமா பாடல்கள் வாசிப்பதற்கும், நடனமாடுவதற்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனைத் தரிசித்து வருகின்றனர்.

சூரசம்ஹாரம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தைக் காணவும், 10-ம் திருநாளை முன்னிட்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவில் வளாகத்தில் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்க அனுமதி

இந்த நிலையில், தசரா திருவிழாவின் புனிதத்தன்மையைப் பேணிக்காக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் மேளம், நாதசுரம் உள்ளிட்ட அம்பாளுக்குரிய பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா பாடல்களை இசைக்க அனுமதி இல்லை

மேலும், பேண்ட் செட் மற்றும் இதர நவீன இசைக்கருவிகளைக் கொண்டு சினிமா பாடல்களை இசைப்பதற்கும், அந்தப் பாடல்களுக்கு ஏற்ப கோவில் வளாகத்தில் நடனமாடுவதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எனவே, கோவில் நிர்வாகத்தின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அதற்கேற்ப தங்களது நேர்த்திக்கடன்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு பக்தர்களும் தசரா குழுவினரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அமைதியான சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்காதீர்கள்! - அமைச்சர் ரமேஷுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை,

அமைதியான சமூகத்தில், தேவையற்ற குழப்பங்களை உருவாக்காதீர்கள் அமைச்சர் ரமேஷுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர், கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழைய கூடாது என, கடந்த 2024 ஆம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள், தொப்பி அணிந்த இஸ்லாமியரை நீங்கள் உடன் அழைத்து சென்றது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகம விதிகள்

இந்து கோவில்களின் புனிதத்தை போற்றி பாதுகாக்க வேண்டிய இந்து அறநிலையத்துறையின் அமைச்சரான நீங்கள், கோவில்களின் ஆகம விதிகளை தொடர்ந்து அவமதிப்பது, ஆணவத்தின் வெளிப்பாடே தவிர வேறில்லை.

என்ன ஆதாயம் இருக்கிறது?

இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவை முதல் வரிசையில் அமர்த்துவதன் மூலமும், அண்ணாமலையார் கோவிலுக்குள் "உதவியாளர்" என்ற பெயரில் ஒரு இஸ்லாமியரை உடன் அழைத்து செல்வதன் மூலமும் நீங்கள் என்ன நிறுவ முயற்சிக்கிறீர்கள்? இதில் உங்களுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது?

இந்து மத நம்பிக்கை

இந்து மதத்தின் மீதுள்ள நம்பிக்கையில், பிற மதத்தினர் தானாக இந்து கோவில்களுக்கு வருவது என்பது வேறு. ஆனால், ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் ஒருவரை அழைத்து வருவது என்பது வேறு. எனவே, எப்படியாவது "லைம்லைட்" இல் நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதையாவது செய்து சமூகத்தின் பெருங்கோபத்திற்கு ஆளாகாதீர்கள் அமைச்சரே!

நடவடிக்கை எடுங்கள்

சட்ட விதிகளை மீறி, ஆகம விதிகளுக்கு எதிராக, கோவிலின் பாரம்பரிய முறையை மதிக்காமல், அண்ணாமலையார் கோவிலுக்குள் நுழைந்தவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுங்கள்! இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்!
சென்னை,

தமிழகம் முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனியார் அரிசி ஆலைகள் மற்றும் பிற ஆதாரங்களின் வாயிலாக அரிசியை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்று (17.10.2026) சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காமதேனு அங்காடியில் (TUCS) உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள 11 அமுதம் அங்காடிகள் மற்றும் 19 கூட்டுறவு அங்காடிகள் என மொத்தம் 30 அங்காடிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டமானது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நாளை முதல் படிப்படியாக தொடங்கப்பட உள்ளது.

அதிகபட்சமாக 5 கிலோ அரிசி...

இத்திட்டத்தின் மூலமாக சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 25,000 மெட்ரிக் டன் சன்னரக அரிசியை, கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும். இதன்மூலம் பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதுடன், அரிசி விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாளை ரேஷன் கடைகள் இயங்கும்: உணவு வழங்கல் துறை அறிவிப்பு
சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தொடர் விடுமுறை

பொதுவாக, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை மறுநாள் ஆயுதபூஜை மற்றும் அதனை தொடர்ந்து விஜயதசமி பண்டிகைகள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன.

இதனால் அடுத்தடுத்து தொடர் விடுமுறை தினங்கள் வருவதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்படக் கூடும் என கருதப்பட்டது.

நாளை ரேஷன் கடைகள் இயங்கும்

இதனை தொடர்ந்து, பண்டிகை காலங்களில் குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித தடையுமின்றி பொருட்களை வாங்க ஏதுவாக, மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21-ஆம் தேதி

மேலும், நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பதிலாக, வரும் நவம்பர் 21-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு ஈடுசெய்யும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் உணவு வழங்கல் துறை ஆணையர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் தங்களது ரேஷன் பொருட்களை சிரமமின்றி பெற்று கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் நடிகர் தனுஷ் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம் - ராஜேந்திர பாலாஜி
சிவகாசி,

நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அண்மையில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. எனினும், இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, இனிவரும் காலங்களில் தனுஷ் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாகச் செயல்படும் என்று கடந்த 15-ம் தேதி நடைபெற்ற ரசிகர் மன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், நற்பணி இயக்கத்துக்கான கொடி மற்றும் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

“அதிமுகவுக்கு யார் வந்தாலும் அவர்களை இணைத்துக்கொள்ளும் பக்குவம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவர் இணைத்துக்கொள்வார். இவர் வரலாம், அவர் வரலாம் என்று யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இயக்கத்துக்கு நல்ல கருத்துகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இருகரம் கூப்பி வரவேற்போம்

இளைஞர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக இருக்கிறார். முன்னணி நடிகராக இருக்கும் அவர், அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்.

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கக் கூடாது. இன்று சிலர் திரைப்படங்களிலும் நடிக்கிறார்கள்; அரசியலிலும் ஈடுபடுகிறார்கள்.

நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைய விரும்புவதாகக் கூறப்படும் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதை காலம்தான் பதில் சொல்லும்” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.