நாட்டின் முன்னணி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் முன்னணி மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.


இன்று இரவு முதல் வரும் 26-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் - டெல்லி அரசு அதிரடி உத்தரவு

டெல்லியில் இன்று இரவு முதல் வரும் 26-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.


பொறியியல் செமஸ்டர் தேர்வு: மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை; அரசு முடிவு

மேற்கு வங்காளத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.


We use cookies to provide you the relevant content, advertisments and for analytics. Find out more