எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு


Sri Lankan Fishermen in Puzhal Jail
x

எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை அருகே, இலங்கை மீனவர்கள் சிலர் எல்லை தாண்டி வந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்தபோது அங்கு ரோந்து சென்ற இந்திய கடலோர பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர்.

இவர்கள் இலங்கை கிளி நொச்சியை சேர்ந்த அப்துல் ரசாக் முகமது நாசர்(51), மன்னார்தாள்பாட்டை சேர்ந்த சுகிதரன்(40), திரிகோணமலையை சேர்ந்த பைரூஸ்(44), ஜக்கூர்(49), தினுசன்(42), அலாம்தீன்(46), ரெங்கன் பிரானுன்(42), உவய்ஸ்(59), சுமித் சஞ்சீவ்(37), ரஞ்சித் இந்திகர்(38), இர்பான்(42), நவ்ஷாத்(42), பருத்தித் துறையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணான்(43), கொட்டன் தீவை சேர்ந்த அமிர்தகுமார்(44) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 14 இலங்கை மீனவர்களையும், அவர்கள் வந்த 5 படகுகளையும் வேதாரணயம் போலீசாரிடம் கடலோர காவல்படையினர் ஒப்படைத்தனர். பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் 14 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வரும் 31-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story