dailythanthi
பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலை 30 சதவீதம் அதிகரிக்கும்: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி
அதிவேக செயல்திறன், சிறந்த கேமரா, உயர்தர டிஸ்பிளே, நீண்டகால மென்பொருள் அப்டேட் போன்ற உயர்தர வசதிகளை கொண்ட பிரீமியம் ஸ்மார்ட் போன்களின் விலை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது. டிராம் (தற்காலிக ஸ்டோரேஜ்) மற்றும் நாண்ட் விலை அதிகரிப்பு, ஏ.ஐ. தரவு மைய தேவை அதிகரிப்பு போன்றவை கடந்த 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்ததை விட தற்போது 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.
இதனால் மேற்படி ஸ்மார்ட் போன்களின் விலையை மாற்றியமைக்கும் நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.சந்தையின் முன்னணி விற்பனையாளரான சாம்சங் ஏற்கனவே ஸ்மார்ட் போன்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. மேலும் தனது பிரீமியம் ஸ்மார்ட்போனான கேலக்சி எஸ்26-ன் விலையை தீபாவளிக்கு முன்னரே 17 சதவீதம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனியாக வராதீர்கள், கூட்டமாக வந்து பாருங்கள்... உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு வாலிபர் தற்கொலை
சென்னை,
"தனியாக வராதீர்கள், கூட்டமாக வந்து பாருங்கள்" என உறவினர்களுக்கு 'வாட்ஸ்அப்'பில் மெசேஜ் அனுப்பி விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
உறவினர்களுக்கு மெசேஜ்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவரது மகன் அன்பரசு (27 வயது). இவர், சென்னை ஆவடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பக்தவச்சலம் தெருவில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனிமையில் வசித்து வந்த அன்பரசு, தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் வசிக்கும் தனது சித்தப்பா ராஜகுரு மற்றும் உறவினர்களுக்கு 'வாட்ஸ் அப்' மூலம் "தனியாக வராதீர்கள், கூட்டமாக வந்து என்னை பாருங்கள்" என மெசேஜ் அனுப்பினார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜகுருவும், அவரது மனைவியும் உடனடியாக அன்பரசு தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றனர். அங்கு அன்பரசு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அன்பரசு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அன்பரசுவின் சகோதரி பிரபாவதி அளித்த புகாரின் பேரில் போலீசார் tவழக்குப்பதிவு அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைக்காக பெற்ற தாயைக் கொன்று கொள்ளை நாடகம்: மகள் கைது
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே 54 வயது பெண் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நகைக்காக பெற்ற தாயைக் கொன்றுவிட்டு கொள்ளை நாடகமாடிய அவருடைய மகளே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளுடன் வசித்த தாய்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் வி.ஐ.பி. சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 54). இவர் அங்குள்ள ஒரு தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இதனால் கீதா தனது மூத்த மகள் சரண்யா (தனியார் பள்ளி ஆசிரியர்) மற்றும் பேரனுடன் வசித்து வந்துள்ளார்.
பகலில் நடந்த கொடூரம்
இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி அன்று சொந்த வேலை காரணமாக கீதா பணிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது பேரன், வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கீதா அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.10,000 ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
போலீசார் தீவிர விசாரணை
இந்த சம்பவம் குறித்து மகள் சரண்யா அளித்த புகாரின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
அதிர்ச்சித் திருப்பமும் கைதும்
இதனால் சந்தேகமடைந்த போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது மகள் சரண்யா முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நகைக்காக தாயுடன் ஏற்பட்ட தகராறில் தானே தாயைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகவும், பின்னர் மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து சென்றது போல் நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து சரண்யாவைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகைகளை மீட்கும் பணியிலும், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக பெற்ற தாயையே, மகள் கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனது மனைவி அழுதுகொண்டிருந்தார்; முதலில் எனக்கு ஆதரவாகப் பேசியவர் கவுதம் கம்பீர்" – சர்பராஸ் கான் உருக்கம்
இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியே கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டால் தானும் தனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனை அடைந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். 2024-25-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியின் ஓய்வறையில் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட கருத்து வேறுபாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்த விவகாரத்தில் சர்பராஸ் கான் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அவர், ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. இந்த விவகாரம் குறித்து பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
சர்பராஸ் கான்
இதுகுறித்து சர்பராஸ் கூறுகையில், "இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. பார்டர் – கவாஸ்கர் தொடர் முடிந்து 20 முதல் 25 நாட்கள் ஆகியிருந்தன. அந்தத் தொடரின்போது எனக்குக் காயம் ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது திடீரென டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியே கசியவிட்டதாக செய்திகள் பரவத் தொடங்கின. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்தன. யாரிடம் இதுகுறித்துப் பேசுவது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் தொடர்ந்து வந்த அழைப்புகளால் எனது செல்போனை அணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.
மேலும், இந்த விவகாரம் தனது குடும்பத்தினரை மிகவும் பாதித்ததாகக் குறிப்பிட்ட அவர், "எனது தந்தை மிகவும் வருத்தப்பட்டார். எனது மனைவியும் அழுதுகொண்டிருந்தார். என்னால் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முடியும். ஆனால் எனது தந்தை, தாய், சகோதரர் மற்றும் மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்டதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. சமூக வலைதளங்களில் ஒரு சிறிய விஷயத்தைக்கூட பெரிதுபடுத்தி விடுகிறார்கள். ஒருவரது செயல்பாட்டை பாதிக்க முடியாவிட்டால், அவரது பெயரைக் கெடுக்க முயற்சிப்பார்கள் என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற ஒன்றுதான் நடந்தது" என்று தெரிவித்தார்.
கவுதம் கம்பீர்
இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் சர்பராஸ் கூறினார். "நான் செல்போனை அணைத்திருந்த நிலையில் கவுதம் கம்பீர் சார் எனக்கு இரண்டு முறை அழைப்பு விடுத்தார். தேவையற்ற பேச்சுகளிலும் அரசியலிலும் தலையிட வேண்டாம். உனது கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்து என்று அறிவுரை கூறினார். அதற்கு நான், எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால் எனது தந்தை மிகவும் வருத்தமாக இருக்கிறார், எனது மனைவியும் அழுதுகொண்டிருக்கிறார் என்று தெரிவித்தேன். உடனே கம்பீர் சார் எனது தந்தையிடம் பேசினார்.
இதுபோன்ற பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். சர்பராஸ் நல்ல கிரிக்கெட் வீரர். அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடட்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னை அழைக்கலாம் என்றும் கூறினார். எனக்கு முதலில் அழைப்பு விடுத்து ஆதரவளித்தவர் கம்பீர் சார்தான்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த சர்பராஸ், "உண்மையிலேயே நான் டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை கசியவிட்டிருந்தால், அதன்பிறகு இந்தியா ஏ அணியிலும், இலங்கை தொடருக்கான இந்திய அணியிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா? இந்தச் செய்திகளை யார் பரப்பினார்கள் என்பதும் எனக்குத் தெரியாது" என்று கேள்வி எழுப்பினார்.
பொருளுக்கு பணம் கொடுக்காத ஒப்பந்ததாரர் வழக்கு: டவுண் பஞ்சாயத்து இயக்குநர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொடுத்த பொருளுக்கு பணம் கொடுக்காத டவுண் பஞ்சாயத்துகள் இயக்குநர் 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த ஒப்பந்ததாரர்
சென்னை ஐகோர்ட்டில், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தைச் சேர்ந்த டி.ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் பொருட்களை வழங்கும் ஒப்பந்த பணி எடுத்துள்ளேன். 2025-2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பணி வழங்கவில்லை.
ரூ.17.68 லட்சம் தரவில்லை
இந்த நிலையில், அவசர நிலைக்காக இந்த பேரூராட்சிக்கு தெரு விளக்கு, குடிநீர், பொதுசுகாதாரம் உள்ளிட்ட வசதிகளுக்காக பொருட்களை கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி முதல் அக்டோபர் 16-ந்தேதி வரை வழங்கியுள்ளேன். இதற்காக சுமார் ரூ.17.68 லட்சம் தர வேண்டும். ஆனால், இதுவரை பேரூராட்சி செயல் அதிகாரி பணத்தை தரவில்லை. இதுகுறித்து டவுண் பஞ்சாயத்து இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
பேரூராட்சி பணம் வழங்க ஒப்பந்ததாரர் கோரிக்கை
நான் ஒரு சிறு ஒப்பந்ததாரர். பேரூராட்சி தரவேண்டிய தொகையை வழங்காததால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளேன். தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டு பணத்தை வழங்கும்படி அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
டவுண் பஞ்சாயத்து இயக்குநர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.சத்தியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி டவுண் பஞ்சாயத்துகள் இயக்குநர், இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
திருவான்மியூர் டாஸ்மாக் கடை இருக்கும் நிலத்தின் ஆவணங்களை கேட்க தடை: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை,
சென்னை திருவான்மியூரில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையின் நில ஆவணங்களை கேட்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், அசோக்நகரைச் சேர்ந்த எஸ்.செல்லத்துரை என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து திருவான்மீயூரில் 2 கிரவுண்ட் 380 சதுர அடி நிலத்தை வாங்கினேன். ஆனால், எனக்குப் பத்திரப்பதிவு செய்து தரவில்லை என்பதால், ஐகோர்ட்டில் கடந்த 2007-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எனக்கு பத்திரப்பதிவு செய்துக் கொடுக்க வீட்டு வசதி வாரியத்துக்கு 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன்படி, அந்த நிலத்துக்குரிய ஒட்டுமொத்த தொகையையும் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி செலுத்தி விட்டேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலம் என் வசம் உள்ளது. நான்தான் அதன் உரிமையாளர்.
நிலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வாடகை
இந்த நிலத்தை கடந்த 2004-ம் ஆண்டு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வாடகைக்கு விட்டேன். இந்த நிலையில் திடீரென நிலத்துக்குரிய பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்களை கேட்டு கடந்த அக்டோபர் 27-ந்தேதி அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
நீதிபதி உத்தரவு
இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.வெங்கடேஷ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, டாஸ்மாக் மேலாளர் நோட்டீசுக்கு தடை விதித்த நீதிபதி, இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி டாஸ்மாக் மேலாளருக்கு உத்தரவிட்டார்.
டாஸ்மாக் மூடல்
இதற்கிடையில், திருவான்மியூர் மதுக்கடையை டாஸ்மாக் மேலாளர் இழுத்து மூடிவிட்டார். "ஐகோர்ட்டு ஆவணங்கள் கேட்பதற்குத்தான் தடை விதித்துள்ளது. மதுக்கடையை திறக்க உத்தரவிடவில்லை என்று மேலாளர் கூறுகிறார். சென்னையில் அதிக மது விற்பனை நடைபெறும் கடையை டாஸ்மாக் மேலாளர் உள்நோக்கத்துடன் மூடியுள்ளார். இதுகுறித்து ஐகோர்ட்டை நாட உள்ளோம் என்று மனுதாரர் வக்கீல் கூறினார்.
டிரம்ப் பாராட்டு: நல்லாட்சிக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் - வானதி சீனிவாசன் பெருமிதம்!
சென்னை,
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளதையும், குறைந்த வட்டி விகிதங்களையும் டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
டிரம்ப் பாராட்டு
இது குறித்து, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
உலக வல்லரசான அமெரிக்காவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னுதாரணமாகக் குறிப்பிடும் அளவிற்கு உயர்ந்துள்ளது பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!
இந்தியாவில் குறைந்த வட்டி விகிதங்களும், சுமார் 7% GDP வளர்ச்சியும் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவும் இத்தகைய பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பது, இந்தியாவின் பொருளாதார வலிமையை உலக அரங்கில் மீண்டும் பறைசாற்றியுள்ளது.
மோடியின் தலைமைப் பண்பு பாராட்டுக்குரியது
சர்வதேச வர்த்தகச் சவால்களையும், அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு போன்ற நெருக்கடிகளையும் ராஜதந்திரத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் எதிர்கொண்டு, பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திய பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு பாராட்டுக்குரியது.
உலக அளவில் போர் சூழலால் ஏற்பட்ட பொருளாதாரச் சவாலான காலகட்டங்களிலும் எரிபொருள் சிக்கனம், தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுதல், உள்நாட்டுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தல் என நாட்டு மக்களிடம் பிரதமர் விடுத்த வேண்டுகோள்கள், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கிய மக்கள் பங்களிப்பின் அவசியத்தை உணர்த்தின.
பெருமைமிகு அங்கீகாரம்
அதன்பின் மத்திய அரசின் வலுவான பொருளாதாரச் சீர்திருத்தங்கள், உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம், முதலீடுகளை ஈர்த்தல், நிதி ஒழுக்கம், வலுவான சர்வதேச உறவுகள் என ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளே இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு வலுசேர்த்துள்ளன.
இது பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமைக்கும், மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சிக்கும், 140 கோடி இந்திய மக்களின் உழைப்புக்கும் கிடைத்த பெருமைமிகு அங்கீகாரம்!
தாய்நாட்டை தாழ்த்திப் பேசும் ராகுல் காந்தி
இவ்வாறு உலக நாட்டுத் தலைவர்களே இந்தியாவைப் புகழ்ந்து வரும் வேளையில், அயல்நாட்டில் தாய்நாட்டை தாழ்த்திப் பேசும் ராகுல் காந்தி இனியாவது புரிந்து கொண்டு தேசத்தின் வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடும்போது கால் எலும்பில் வலி ஏற்படுகிறதா? ஏன் தெரியுமா?
காலின் முன்பகுதியில் உள்ள ஷின் எலும்பைச் சுற்றி வலி ஏற்படுவதைத்தான் ஷின் ஸ்பிளிண்ட்ஸ் என்கிறார்கள்.
திடீரென அதிக தூரம் ஓடுவது அல்லது ஓடும் வேகத்தை அதிகரிப்பது காலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
கான்கிரீட் போன்ற கடினமான தரைகளில் தொடர்ந்து ஓடுவது காலில் ஏற்படும் அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
போதிய ஆதரவு இல்லாத அல்லது தேய்ந்துபோன காலணிகளைப் பயன்படுத்துவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஓடும்போது வலி ஏற்பட்டால் தொடர்ந்து ஓடாமல் ஓய்வு எடுப்பது அவசியம்.வலி உள்ள பகுதியில் துணியில் சுற்றிய ஐஸ் கட்டியை 15–20 நிமிடங்கள் வைக்கலாம்.
வலி உள்ள பகுதியில் துணியில் சுற்றிய ஐஸ் கட்டியை 15–20 நிமிடங்கள் வைக்கலாம்.
திடீரென ஓடும் தூரத்தை அதிகரிக்காமல், மெதுவாகப் பயிற்சியை அதிகரிக்க வேண்டும்.
வலி அதிகமாக இருந்தாலோ, ஓய்விலும் வலி நீடித்தாலோ அல்லது நடக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும். சில நேரங்களில் எலும்பில் அழுத்த முறிவும் இதேபோன்ற வலியை ஏற்படுத்தலாம்.
முதல் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 486/4: 118 ரன்கள் முன்னிலை
வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 486 ரன்கள் குவித்துள்ளது.
இதன் மூலம் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 368 ரன்களை விட இந்தியா 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்கத்தில் இருந்தே இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், டெவால்ட் படிக்கல் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. படிக்கல் 80 ரன்களில் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் போல்டானார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 290 பந்துகளில் 136 ரன்கள் (9 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து ஆட்டமிழந்தார்.
கே.எல்.ராகுல்
இது அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 13-வது சதமாகும். மறுமுனையில் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 98 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக்கப் டஃபி பந்துவீச்சில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். பின்னர் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 பந்துகளில் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருடன் அன்ஷுல் கம்போஜ் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால், 4-வது நாளில் மேலும் ரன்களைக் குவித்து நியூசிலாந்து அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்க முயற்சிக்கும்.
கோவையை நச்சுக் காடாக மாற்றுவதா? ரூ.450 கோடி குப்பை எரி உலை திட்டத்தைக் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை,
கோவை மாநகரத்தை நச்சுக்காடாக்கும் ரூ.450 கோடி குப்பை எரி உலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாநகர எல்லைக்குட்பட்ட வெள்ளலூரில் தினமும் 1,200 டன் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் சீரழிவுத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்தியாவில் வாழ்வதற்கு உகந்த நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோவை மாநகரத்தை நச்சுக்காடாக்கும் நோக்குடன் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசும், கோவை மாநகராட்சியும் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
2025-ம் ஆண்டில் கோவை வெள்ளலூர் குப்பை எரி உலை திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. உள்ளூர் மக்களும், அங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் கடந்த இரு ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை எதிர்த்து வரும் நிலையில், அதைப் பற்றிக் கவலைப்படாத தமிழக அரசு, இப்போது ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. ரூ.450 கோடியில் தினமும் 1,200 டன் குப்பைகளை எரித்து 18 முதல் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான இத்திட்டத்திற்காக வரும் 25-ம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்யலாம்; அவை வரும் 26-ம் தேதி திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார் என்று தமிழக அரசும், கோவை மாநகராட்சியும் அறிவித்துள்ளது.
குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பொருத்தமற்றது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதனால் தான் வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், சேலம் ஜாகிர் அம்மாபாளையம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் குப்பை எரி உலைகள் அமைக்கும் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது. குறிப்பாக கோவையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது அம்மாநகரத்தை நச்சுக்காடக மாற்றி விடும்.
கோவை மாநகராட்சிக்காக 2025-ம் ஆண்டில் இத்திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டபோது, அதன் மதிப்பு ரூ.100 கோடியாக இருந்தது. தினமும் 300 டன் குப்பைகளை எரித்து 5 முதல் 6 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பது தான் திட்ட இலக்காக இருந்தது. ஆனால், அதைப் படிப்படியாக உயர்த்தி இப்போது ரூ.450 கோடியில் 1,200 டன் குப்பைகளை எரித்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் குப்பை எரி உலை திட்டமாக விரிவாக்கப்பட்டுள்ளது.
குப்பை எரி உலைத் திட்டத்தைக் கொண்டு வந்தது முந்தைய திமுக அரசுதான். திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால், மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், ஒப்பந்ததாரர்கள் எவரும் முன்வராததாலும் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின் ஏப்ரல், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் என பலமுறை ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் மக்கள் எதிர்ப்பால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், திமுக கொண்டு வந்த பேரழிவுத் திட்டத்தை செயல்படுத்த தவெக அரசும் துடிப்பது ஏன்? என்பதுதான் பாமகவின் வினா.
இந்தத் திட்டத்திற்காக கோவை மாநகராட்சியிலிருந்து மட்டும் தினமும் 760 டன் குப்பைகள் கொண்டு வந்து எரிக்கப்படும். திருப்பூர் மாநகராட்சி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தும் குப்பைகள் கொண்டு வந்து எரிக்கப்படும். இவற்றில் 60% ஈரக்கழிவுகள் இருப்பதால், அவை கொண்டு வரப்படும் பாதை நெடுகிலும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நோய்ப்பரவல் உள்ளிட்ட கேடுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த ஆலைக்காக தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் பெரும்பகுதி நிலத்திலிருந்துதான் எடுக்கப்படும் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.
மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரி உலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு டையாக்சின், 3 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரி உலையில் இருந்து வெளியாகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. போபால் நகரில் விஷவாயு கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரி உலைகளால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.
அதனால் தான் உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இத்திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. இந்தியத் தலைநகர் டெல்லியில் தினமும் 6,550 டன் குப்பைகளை எரிக்கும் 4 எரி உலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள மக்களுக்கு கடுமையான உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி அவற்றை மூட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் தோல்வியடைந்த இந்தத் திட்டத்தை ஊழல் செய்யும் நோக்குடன் தான் திமுக அரசு தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெகவும், திமுக வகுத்த அழிவுப்பாதையில் பயணிப்பது ஏன்? இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், திமுகவின் ஊழல் சகாப்தத்தை தவெகவும் தொடர்வதாகவே பார்க்கப்படும்.
தமிழ்நாட்டில் சூழலியல் செழுமைமிக்க நகரங்களில் கோவையும் ஒன்று. அமைதியான சூழலில், தூயக் காற்றுடன் கூடிய வாழ்க்கையை வாழ விரும்புவோர் அனைவரும் அதற்காக தேர்ந்தெடுக்கும் நகரம் கோவையாகத் தான் இருக்கும். ஆசியாவின் 64 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, அவற்றில் வாழத்தகுந்த நகரம் எது? என்று நடத்தப்பட்ட ஆய்வில் கோவை மாநகரம் தான் முதலிடம் பிடித்தது. இத்தகைய சிறப்புமிக்க நகரை குப்பை எரி உலை திட்டத்தின் மூலம் நச்சுக்காடாக மாற்ற தமிழக அரசு துடிப்பதை அனுமதிக்க முடியாது.
கோவை வெள்ளலூரில் மலை போல குப்பை குவிந்து கிடப்பதால் மக்கள் பல கேடுகளை அனுபவித்து வருகின்றனர். அந்தக் குப்பைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என 2018-ம் ஆண்டிலேயே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்த நிலையில், அதற்கு எதிரான நிலைப்பாட்டை அரசு எடுக்கக் கூடாது.
மாறாக, பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணைப்படி, கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கு அகற்றப் பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டவாறு வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதை செய்ய மறுத்தால் கோவை மாவட்ட மக்களைத் திரட்டி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை திடீர் சரிவு ஏன்?
மதிப்பு மிகுந்த மஞ்சள் உலோகம் தங்கம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கத்தின் இருப்பும் முக்கிய அங்கத்தை வகிக்கிறது.
தங்கத்தின் விலை எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கும். இதனால் ஏழைகளின் எட்டாக்கனியாகவே தங்கம் நீடித்து வந்தது.
திடீர் சரிவு
இந்தநிலையில், தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக மளமளவென சரியத் தொடங்கியது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்திற்கும் கீழே வரத் தொடங்கியது. இதனால் பலரும் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை வாங்கி வருகின்றனர்.
எப்போதும் உச்சம் நோக்கியே செல்லும் தங்கம் இப்போது ஏன் இப்படி சரியத் தொடங்கியது தெரியுமா? இதற்கு முக்கிய நபர் ஒருவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தைதான் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் நிஜம். அந்த ஒரு வார்த்தை என்ன... அந்த வார்த்தையைச் சொன்ன முக்கியமான நபர் யார் என்பது பற்றி அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்திடுங்கள்.
https://www.youtube.com/watch?si=UKk7mVrtD5K3Hr16&v=c648_it30W0&feature=youtu.be
வி.எஸ்.பாபு அரசியல் பயணம்
சென்னை,
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு 72 நாட்களுக்குப் பின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் பயணம்
வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. வடசென்னையின் முக்கிய அரசியல் முகமாக அறியப்பட்டவர் அவர். கடந்த காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்காகப் பாடுபட்ட அவர், 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதே ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வென்றார்.
கடந்த காலங்களில் எந்தெந்த கட்சிகளில் வி.எஸ்.பாபு செயலாற்றி வந்தார், என்னென்ன பொறுப்புகளை வகித்து வந்தார் என்கிற அவரின் அரசியல் வரலாறு குறித்து அறிந்திட, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்கைக் கிளிக் செய்து பார்த்திடுங்கள்.
வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=Rsso8n7t19I
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகை
சென்னை,
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகை தர உள்ளார்.
சிபி ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன். அவர் இன்று தமிழகம் வர உள்ளார். விமானம் மூலம் சென்னை வரும் சிபி ராதாகிருஷ்ணனை அதிகாரிகள் வரவேற்க உள்ளனர்.
இதனை தொடர்ந்து, சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள கொட்டிவாக்கத்தில் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 42-வது ஆண்டு விழாவில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். இன்று மதியம் 2.30 மணியளவில் நடைபெறும் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பின்னர் நெல்லை நாடார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியையும் திறந்து வைக்கிறார்.
பின்னர், சென்னை நீலாங்கரையில் இன்று மாலை நடைபெறும் தேமுதிக பொருளாளர் சுதீசின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ள உள்ளார்.
சிபி ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வர உள்ள நிலையில் அவர் பயணிக்கும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் குழந்தை வரம் பெற்ற பக்தர்கள் கரும்புத் தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன்
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதியினர் மாடவீதிகளில் கரும்புத் தொட்டில் சுமந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கார்த்திகை தீபத் திருவிழா
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாள் உற்சவம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன்
இக்கோவிலில் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்யும் தம்பதியர், வேண்டுதல் நிறைவேறி குழந்தை பிறந்ததும் கரும்புத் தொட்டில் கட்டி மாடவீதிகளில் வலம் வருவது வழக்கம். அதன்படி, இன்று அதிகாலை முதலே ஏராளமான தம்பதியினர் 2 கரும்புகளை இணைத்து, அதில் புதுச்சேலையால் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை அதில் படுக்க வைத்தனர். பின்னர், அதனைத் தோளில் சுமந்தபடி கோவிலின் 4 மாடவீதிகளிலும் வலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு
விடுமுறை தினம் மற்றும் தீபத் திருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் வரும் 24-ம் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உ.பி.யில் சோகம்: டெம்போ மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து - 5 பேர் பலி
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் டெம்போ மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உயிரிழந்த நபரின் உடலை உத்தரபிரதேச மாநிலம் காசிபூருக்கு நேற்று ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். அந்த ஆம்புலன்சில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் 3 பேர், டிரைவர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர்.
விபத்து - 5 பேர் பலி
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பாரபங்கி மாவட்டம் காராவங் கிராமம் அருகே பூர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் முன்னே சென்ற டெம்போ மீது ஆம்புலன்ஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்சியில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், படுகாயமடைந்த 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க வேண்டும்! - அன்புமணி
சென்னை,
காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வாடும் சம்பா பயிர்கள்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
மேட்டூர் அணையிலிருந்து ஒரு மாதத்திற்கு மேலாக காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும், வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன. வாடும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களின் துயரங்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 18 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் போதிலும், சாகுபடிக் காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியாது என்பதை உணர்ந்ததால், வழக்கமாக அளவை விட பாதிக்கும் குறைவாக சுமார் 7 லட்சம் ஏக்கரில் தான் சம்பா/தாளடி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், அந்த பயிர்களையும் காப்பாற்ற முடியவில்லை.
மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததைக் காரணம் காட்டி, கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வினாடிக்கு 10,920 கன அடியாக இருந்த நீர்த்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, அக்டோபர் 25-ஆம் தேதி 1003 கன அடியாக குறைக்கப்பட்டது. இப்போது வரை அதே அளவில் தான் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அது குடிநீர்த் தேவையின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றும். இன்னொருபுறம் விவசாயிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழையும் இதுவரை குறிப்பிடக்கத்தக்க அளவில் பெய்யாதது தான் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா/தாளடி பயிர்கள் கருகத் தொடங்கியிருப்பதற்கு காரணமாகும்.
சரி செய்யவே முடியாது
சம்பா நெற்பயிரைக் காப்பாற்றுவதற்காக சில பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெளியிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி, வயல்களில் பாய்ச்சுகின்றனர். வசதி இல்லாத உழவர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளில் இருந்து பானைகளில் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றுகின்றனர். ஆனால், சம்பா/தாளடி பயிர்களின் சராசரி வாழ்நாள் 120 முதல் 125 நாள் ஆகும். ஆனால், பெரும்பாலான பயிர்கள் இப்போது 40 முதல் 50 நாள்களை மட்டுமே கடந்துள்ள நிலையில், இன்னும் 70 முதல் 80 நாள்களுக்கு இதே முறையில் தண்ணீர் வழங்குவது சாத்தியமல்ல. அடுத்த சில நாள்களில் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டும் தான் சம்பா பயிர்களைக் காப்பாற்ற முடியும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 61.53 அடியாகவும், நீர் இருப்பு 25.84 டி.எம்.சியாகவும் குறைந்து விட்டது. இந்த நீரைக் கொண்டு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். வடகிழக்கு பருவமழையும் குறிப்பிடத்தக்க அளவில் பெய்யாவிட்டால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது.
மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படாததால், நடப்பாண்டில் குறுவை சாகுபடி பெரிய அளவில் செய்யப்படவில்லை. இப்போது சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்காக உழவர்கள் ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்துள்ளனர். இத்தகைய சூழலில் சம்பா/தாளடி பயிர்களும் வறட்சியால் வாடி கருகிவிட்டால், அதனால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது. வட்டிக்கு கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்துள்ள காவிரி பாசன மாவட்ட உழவர்கள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள்.
ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு
உழவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த தவெக, இப்போது அனைத்து உழவர்களுக்கும் ரூ.75,000 கடனை மட்டுமே தள்ளுபடி செய்திருப்பதால், மீதமுள்ள கடன்தொகையை உடனடியாக செலுத்தும்படி கூட்டுரவு வங்கிகளில் இருந்து அழுத்தம் தரப் படுகிறது. சம்பா சாகுபடியில் ஏற்பட்ட இழப்பும் இத்துடன் சேர்ந்து கொண்டால் உழவர்கள் நிலை மோசமாகிவிடும்.
இந்த மோசமான நிலையிலிருந்து உழவர்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, அதற்குரிய இழப்பீடுகளை வழங்குவது தான். இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களுக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு செய்து, அவற்றை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் வாடிய சம்பா/தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முழுமையாக ரத்து செய்வதுடன், உழவர்கள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல ஏஐ நிறுவனம்?
சாட்ஜிபிடி   செயலியை உருவாக்கிய ஓபன்ஏஐ  நிறுவனம், செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் களமிறங்க ஓபன்ஏஐ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீடியாடெக் சிப்செட் பயன்படுத்த திட்டம்?
இந்த புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் நிறுவனத்தின் பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட டைமன்சிட்டி 9600 சிப்செட் பயன்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகளை வேகமாக மேற்கொள்ளும் வகையில் 2 பிரத்யேக  ஏஐ பிராசஸிங் யூனிட்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர  எல்பிடிஆர் 6 ரேம்,  யுஎப்எஸ் 5.0 சேமிப்பக வசதி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயலிகளுக்கு பதிலாக AI உதவியாளர்
தற்போதைய ஸ்மார்ட்போன்களில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், ஓபன்ஏஐ உருவாக்கும் ஸ்மார்ட்போனில் ஏஐ உதவியாளருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.அதாவது, பயனர்கள் தனித்தனி செயலிகளை திறந்து பயன்படுத்துவதற்கு பதிலாக, தங்களுக்குத் தேவையான பணிகளை ஏஐ உதவியாளர் மூலம் மேற்கொள்ளும் வகையில் இந்த போன் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027 அல்லது 2028-ல் அறிமுகம்?
இந்த ஸ்மார்ட்போனை தயாரிக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான எப்.ஐ.எச் மொபைல் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த புதிய ஸ்மார்ட்போன் 2027-ம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2028-ம் ஆண்டில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போன் தயாரிப்பு, அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அறிமுக தேதி குறித்து ஓபன்ஏஐ நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழப்பு: 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 பேர் உயிரிழப்பு
மணிப்பூர் மாநிலம் சண்டேல் மாவட்டத்தில் உள்ள சக்பிகரோங் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு தலைச்சுற்றல், வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் இம்பாலில் உள்ள ஜே.என்.ஐ.எம்.எஸ்., ஆர்.ஐ.எம்.எஸ்., ஷிஜா மற்றும் பபினா உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் கடந்த 48 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
முதல்-மந்திரி நேரில் ஆய்வு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிப்பூர் முதல்-மந்திரி ஒய்.கே. சிங், நேற்று மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "ஷிஜா மருத்துவமனையில் 140-க்கு மேற்பட்டோரும், பபினா மருத்துவமனையில் 41-க்கு மேற்பட்டோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சண்டேல் மாவட்டத்திற்கு தேவையான மருந்துகளுடன் சிறப்பு மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கானுக்கு தலைக்கனம் அதிகம் என நினைத்தேன்.. பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்
மும்பை,
ஷாருக்கானுடன் இணைந்து 'ஜாது'   என்ற படத்தில் தேவன் போஜானி நடித்துள்ளார். இந்தப் படம் பின்னர் 'யே லம்ஹே ஜுதாயி கே'   என்ற பெயரில் வெளியானது. 1990-களின் தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஷாருக்கானை சந்தித்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
ஷாருக்கானுக்கு தலைக்கனம் அதிகம் அவர் சக நடிகர்களிடம் ஆணவமாக நடந்துகொள்வார் என்றும் பலர் தன்னிடம்  கூறினார்கள்.. நடிகர்கள் அமிதாப் பச்சன், திலீப் குமார் ஆகியோரைப் பற்றி ஷாருக்கான் தவறாகப் பேசுவதாகவும் கேள்விபட்டேன்.  இதனால் ஷாருக்கானிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், படப்பிடிப்பின்போது ஷாருக்கானே முதலில் தன்னிடம் வந்து அறிமுகம் செய்துகொண்டார். அப்போது, "ஹலோ, நான் ஷாருக்கான். 'ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்' படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது" என்று ஷாருக்கான்  பாராட்டினார். இதனால் ஆச்சரியமடைந்த நான், மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும் அவரே நேரில் வந்து பேசியது என்னை கவர்ந்தது.  அதன்பிறகு இருவரும் சகஜமாகப் பேசிப் பழகினே” என்றார்.
நான் நினைத்தது முற்றிலும் தவறு!
மேலும், ஷாருக்கான் குறித்து தான் கேள்விப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல என்பதை நேரில் சந்தித்த பிறகு புரிந்துகொண்டதாகவும், அவரைப் பற்றி தான் நினைத்தது முற்றிலும் தவறு என்றும் தெரிவித்துள்ளார். ஷாருக்கான் நடித்த 'ஜாது' திரைப்படம் உடனடியாக வெளியாகவில்லை. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 'யே லம்ஹே ஜுதாயி கே' என்ற பெயரில் வெளியானது. இப்படத்தின் சில காட்சிகளில் மாற்று நடிகர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஷாருக்கானின் சில காட்சிகளுக்கு மற்றொரு நடிகர் பின்னணி குரல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றி 5 அடி உயர தடுப்பு வேலி: தமிழக அரசு உத்தரவு
சென்னை,
தமிழகத்தில் பாதுகாப்பற்ற, கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றி 5 அடி உயர தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் பிரபுசங்கர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாதுகாப்பற்ற கைவிடப்பட்ட குவாரிகள்
சமீப காலங்களில் பாதுகாப்பற்ற கைவிடப்பட்ட குவாரிகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகள் பதிவாகி வருகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது. இத்தகைய பாதுகாப்பற்ற கைவிடப்பட்ட குவாரிகள் குறிப்பாக, பருவமழையின்போது மழைநீர் தேங்கும் ஆழமான குழிகள், உள்ளூர்வாசிகள், குழந்தைகள், பாதசாரிகள் மற்றும் மேய்ச்சல் கால்நடைகள் தவறி விழுவதற்கும், நீரில் மூழ்குவதற்கும் வழியை ஏற்படுத்துகின்றன.
குவாரிகளை சுற்றி 5 அடி உயர தடுப்பு வேலி
இதை தவிர்ப்பதற்காக, அரசு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்கள் இரண்டிலும் அமைந்துள்ள காலாவதியான அனைத்து கைவிடப்பட்ட குவாரிகளைச் சுற்றியும் நீடித்திருக்கக்கூடிய சுற்றுவேலி அமைக்கப்பட வேண்டும். நீடித்த உழைப்பு மற்றும் பயனுள்ள தடுப்பை உறுதி செய்வதற்காக, அனைத்து குவாரிகளைச் சுற்றியும் குறைந்தபட்சம் 5 அடி உயரத்திற்கு வேலி அமைக்கப்பட வேண்டும்.
2 மாத காலத்திற்குள் வேலி அமைக்க வேண்டும்
அரசு நிலங்களில் அமைந்துள்ள கைவிடப்பட்ட குவாரிகளுக்கு 2 மாத காலத்திற்குள் வேலி அமைக்கும் பணிகளை அதிக முன்னுரிமை அளித்து முடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட முன்னாள் குத்தகைதாரர்கள் தங்கள் சொந்த செலவில் முறையான வேலியை அமைத்துள்ளார்களா? என்பதை உறுதிசெய்ய, காலாவதியான அனைத்து பட்டா நில குவாரிகளிலும், விரிவான கள சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். முன்னாள் குத்தகைதாரர்கள் அதை பின்பற்றத் தவறியிருந்தால் உடனடியாக அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.
எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்
தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின் கீழ் கடுமையான அமலாக்க நடவடிக்கை தொடங்க வேண்டும். கைவிடப்பட்ட குவாரி என்பதைத் தெளிவாகக் குறிக்கும் வகையில் அதன் ஆழத்தை குறிப்பிட்டும், அத்துமீறி நுழைவதற்கு எதிரான எச்சரிக்கையுடனும் கூடிய முக்கிய எச்சரிக்கை பலகைகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதன் சுற்றளவில் வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிரெய்லரை பார்த்து முடிவு செய்யாதீர்கள்: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சல்மான்கான்
மும்பை,
படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் விஎப்எக்ஸ் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான்கான், இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’   திரைப்படம்
பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’   திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் நீளமாக இருப்பதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகளை முன்கூட்டியே வெளியிட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் விஎப்எக்ஸ் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான்கான், இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சல்மான் கான் பதிலடி
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது படத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ தவறாக பேசுவதன் மூலம் சிலர் பார்வையாளர்களையும், பின்தொடர்பவர்களையும் அதிகரித்து புகழ் மற்றும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு கடவுள் நல்லது செய்யட்டும்.டிரெய்லர் மிகவும் நீளமாக இருப்பதாகவும், படத்தின் முழு கதையையும் காட்டிவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் முழு படத்தையும் காட்டவில்லை. டிசம்பர் 4-ம் தேதி முழு படத்தையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன். ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், நீங்கள் ஏற்கனவே டிரெய்லரை பார்த்து படத்தை மதிப்பிட்டு விட்டீர்கள்" என்றார்.
ஏ.ஐ. நிபுணர்களா?
மேலும், படத்தின் காட்சிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், சல்மான்கான் சில காட்சிகளில் உண்மையாக நடிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்த அவர், "இவர்கள் ஏ.ஐ. நிபுணர்களா? விஎப்எக்ஸ் நிபுணர்களா? சல்மான்கான் இந்த காட்சியில் நடிக்கவில்லை, வேறு யாரோ நடித்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நான் இதையெல்லாம் நேரடியாக கவனிக்காமல் இருக்கலாம். ஆனால், எனது குழுவினர் அனைத்தையும் கவனித்து வருகின்றனர்” என்றார்.
டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் மாத்ருபூமி
அபூர்வா லகியா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் 'பேட்டில் ஆஃப் கல்வான்'  என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த படம் பின்னர் 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக சித்ரங்கதா சிங் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து இளைஞர் பலி
சேலம்,
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் 300 அடி ஆழப் பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணத்தில் நேர்ந்த சோகம்
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் (சனிக்கிழமை) அதிகாலை காரில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஏற்காடு - குப்பனூர் மலைப்பாதையில் உள்ள வாணியார் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்
கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 300 அடி ஆழப் பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கியது. விபத்து குறித்து தகவலறிந்த ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒருவர் பலி- 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சபரீஷ் (வயது 26) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மற்ற 4 இளைஞர்களையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
அதிகாலை நேரத்தில் நிலவிய பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்ததா அல்லது அதிவேகம் காரணமா என்பது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் எடப்பாடி மற்றும் ஏற்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை எதிரொலி...சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்..!
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் பணி மற்றும் கொசு மருந்து தெளித்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) வகைக் கொசுக்கள் பயன்படுத்தப்படாத பொருட்களில் மழைநீர் தேங்கி அவற்றில் உற்பத்தியாவதற்கு வாய்ப்புள்ளது. ஏடிஸ் வகைக் கொசுக்கள் பகல் நேரங்களில் மனிதர்களைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்பதால், டெங்கு பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பள்ளிகள், வீடுகள், தெருக்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட இடங்களில் கொசு உற்பத்தியாகும் இடங்களை களப்பணியாளர்கள் கண்டறிந்து அகற்றுதல், கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு ஒழிப்பு புகைப்புரப்பும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
களத்தில் 3,703 பணியாளர்கள்
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மாநகராட்சிப் பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் வீடுகள் தோறும் களப்பணியாளர்கள் மூலம் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள தேங்காய் ஓடு, கண்ணாடிப் பொருட்கள், டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றுதல், வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுப்புழு உருவாகியுள்ளதா எனக் கண்டறிந்து கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், வீடுகள்தோறும் காய்ச்சல் பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்து, அவ்விவரங்களைப் பதிவு செய்தல், அவ்விடத்தில் தீவிரத் தூய்மைப் பணி மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், தெருக்கள் மற்றும் வீடுகளில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடித்தல், உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் மொத்தம் 3,703 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பணியாளரும் நாளொன்றுக்கு 80 முதல் 100 வீடுகளை களஆய்வு மேற்கொள்கின்றனர்.
கொசு மருந்து தெளிப்பு
இதன் ஒரு பகுதியாக, திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5க்குட்பட்ட பகுதி, வார்டு-11க்குட்பட்ட பகுதி, வார்டு-12க்குட்பட்ட எழுத்துக்காரன் தெரு, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட குரு சாந்தி நகர், வார்டு-29க்குட்பட்ட ஶ்ரீ ராமன் சாலை, வார்டு-33க்குட்பட்ட கலைமகள் நகர், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36க்குட்பட்ட பகுதி, வார்டு-40க்குட்பட்ட ஜீவா நகர், 4ஆவது தெரு, அம்பத்தூர் மண்டலம், வார்டு-83க்குட்பட்ட வனசக்தி நகர், வார்டு-91க்குட்பட்ட முகப்பேர், 2ஆவது பிரதான சாலை, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-121க்குட்பட்ட பி.பி சாலை, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-132க்குட்பட்ட பகுதி, வார்டு-136க்குட்பட்ட விஜயராகவபுரம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-153க்குட்பட்ட விக்னேஷ்வரா நகர், வி.ஒ.சி தெரு, ஆலந்தூர் மண்டலம், வார்டு-165க்குட்பட்ட சரஸ்வதி நகர், 1ஆவது பிரதான சாலை, அடையாறு மண்டலம், வார்டு-168க்குட்பட்ட ஈ.சி.ஐ பள்ளி வளாகம், வார்டு-182க்குட்பட்ட செந்தில் நகர், பெருங்குடி மண்டலம், வார்டு-185க்குட்பட்ட வி.ஜி.பி லேயவுட், 2ஆவது குறுக்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணி மற்றும் மழைநீர் வடிகாலில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது: இலங்கை கேப்டன்
ராவல்பிண்டி,
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 98 ரன்னும், பாகிஸ்தான் 325 ரன்னும் எடுத்தன. 227 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை 3-வது நாள் முடிவில் 9 விக்கெட் டுக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 316 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிலன் ரத்னாயகே 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ், அமீர் ஜமால் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
இதையடுத்து 90 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.
இலங்கை
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்து இருந்தது. 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, 3 நாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்வி தொடர்பாக பேசிய இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ்,
“உண்மையைச் சொல்வதானால், தொடரின் முதல் கட்டத்தில் நாங்கள் தடுமாறினோம். நானும் மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்படவில்லை. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தோம். அதில் இருந்து பல சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்ள முடிந்தது. இருப்பினும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் இன்னும் பல பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.
நாங்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பாகிஸ்தானில் தங்கியிருந்தோம். இங்கு எங்களது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்தோம். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பல சாதகமான அம்சங்கள் இருந்தன. முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களும் சில முக்கியமான பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டனர். எனது அணியின் செயல்பாட்டில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும், எதிர்காலத்தில் இன்னும் பல விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான தொடர் இருப்பதால், அதற்காக இந்தக் குறைகளை சரிசெய்து தயாராக வேண்டும். என தெரிவித்துள்ளார்.
விலங்குகளின் உடலில் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள்!
யானையின் தும்பிக்கையில் சுமார் 40,000 தசைகள் உள்ளன. இதனால் சிறிய பொருட்களைக்கூட எளிதாக எடுக்க முடியும்.
ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு சுமார் 45 முதல் 50 செ.மீ. நீளம் கொண்டது.
ஆக்டோபஸுக்கு மூன்று இதயங்கள் உள்ளன. அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
சுறாக்களுக்கு மனிதர்களைப் போல எலும்புகள் கிடையாது. அவற்றின் உடல் குருத்தெலும்புகளால் ஆனது.
பச்சோந்தியால் தனது கண்களை ஒன்றுக்கொன்று தனித்தனியாக அசைத்து வெவ்வேறு திசைகளில் பார்க்க முடியும்.
ஃபிளமிங்கோ பறவைகள் ஒரு காலில் நின்றபடியே ஓய்வெடுக்கவும் தூங்கவும் முடியும்.
பெண் கங்காருவின் வயிற்றில் குட்டியைப் பாதுகாத்து வளர்க்க பிரத்யேகமான பை உள்ளது.டால்பின்கள் மூளையின் ஒரு பகுதியை ஓய்வெடுக்கச் செய்து, மற்றொரு பகுதியை விழிப்புடன் வைத்துத் தூங்குகின்றன.
டால்பின்கள் மூளையின் ஒரு பகுதியை ஓய்வெடுக்கச் செய்து, மற்றொரு பகுதியை விழிப்புடன் வைத்துத் தூங்குகின்றன.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்: முதல்-அமைச்சர் விஜய்
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீனவர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக மீனவர்கள் தினம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளர்ச்சிக்கு பெரும்பங்கு
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரே நாளில் 60,000 பேர் தரிசனம்
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
தினசரி தரிசன வரம்பு நிர்ணயம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் சுமார் சுமார் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க கேரள அரசும் தேவசம் போர்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அதன்படி, தினமும் அதிகபட்சமாக 80,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதில், ஆன்லைன் முன்பதிவு மூலம் 66,000 பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 14,000 பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தீவிர கண்காணிப்பு
பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்வதை உறுதி செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சன்னிதானத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பக்தர்களின் வருகைக்கு ஏற்ப நிமிடத்திற்கு சுமார் 75 பேர் வீதம் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக மீனவர்கள் தினம்: மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வாழ்த்து
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக மீனவர்கள் தினம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
என் அன்பான மீனவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உலக மீன்வள தின நல்வாழ்த்துகள்!
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்துவது, மீனவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, குடும்பங்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு என நமது முதல்-அமைச்சர் பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளார். அதனையேற்று, மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை நம் மீனவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இலக்காக வைத்து வடிவமைத்து வருகிறது.
காப்பீட்டு தொகை உயர்வு?
குறிப்பாக, மீனவர்களின் இன்னுயிர் காக்க, மீனவர்களின் கடல் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாட்டில் முதன்முறையாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தவும், மேலும் தற்போது ரூ.5 லட்சமாக உள்ள மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை இரண்டு மூன்று மடங்காக உயர்த்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவிப்பதுடன், அரசு விதிகளையும் புயல் எச்சரிக்கையையும் பின்பற்றி மீனவர்கள் பாதுகாப்புடன் இருப்பதுடன், கடல் வளங்களைப் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மீன்வளச் செல்வம் கிடைத்திட உறுதியேற்போம்.
மீனவர் நலன் காப்போம்!
மீனவர்களின் இடர்பாடுகளில் என்றும் துணைநிற்பதோடு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முதல்-அமைச்சர் தளபதி தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்.
மீனவர் நலன் காப்போம்!
கடல் வளம் பாதுகாப்போம்!
வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் ஆச்சு தங்கத்துக்கு..? சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் கீழே சரிந்தது - இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை,
தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து மளமளவென சரிந்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சம் தொட்டிருந்த நிலையில், அதற்கு பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.
இறங்குமுகத்தில் தங்கம் விலை
தொடர்ந்து விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வரும் என கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து பேசப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் விலை குறையும் என பல நிபுணர்களால் அவ்வப்போது சொல்லப்பட்டு கொண்டே இருந்தது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் விலை ஏற்ற-இறக்கத்துடன் பயணத்தை தொடங்கினாலும், கடந்த 10-ந்தேதியில் இருந்து தங்கம் விலையில் தொடர்ந்து இறங்குமுகமே காணப்படுகிறது.
ஒரே நாளில் அதிரடி சரிவு
அப்படியாக கடந்த 18-ந்தேதி முதல் பெருமளவில் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 18-ந்தேதி சவரனுக்கு ரூ.2,040-ம், நேற்று முன்தினம் ரூ.1,880-ம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.3,760-ம், கிராமுக்கு ரூ.470-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.92,080-க்கும், ஒரு கிராம் ரூ.11,510-க்கும் விற்பனையானது.
தங்கம் விலையை பொறுத்தவரையில் பொதுவாக ஏறும்போதுதான் அதிரடியாக ஒரே நாளில் அதிகரிக்கும். ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.3,760 சரிவு என்பது இதுவரை இல்லாத ஒரே நாளில் குறைந்த விலை இறக்கமாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.2,500 வரை குறைந்ததே அதிகபட்ச ஒரு நாள் குறைவாக பார்க்கப்பட்டது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.91,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,465-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10-ந்தேதியில் இருந்து இன்று வரையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,790-ம், சவரனுக்கு ரூ.14,320-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் குறையலாம்...
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால், அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைகிறது. இதனால் முதலீட்டாளர்கள் வட்டி தராத தங்கத்தை விற்கும் முனைப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை குறைவதற்கான சூழலே இருப்பதாக சொல்லப்படுகிறது.
பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு
லிமா,
பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டில் நேற்று (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் அன்டிஸ் நகரில் 108 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 7.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கதால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் 7 கிலோ கஞ்சா, 3 அரிவாள்கள் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி
தூத்துக்குடி ரோச்பார்க் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
தூத்துக்குடி ரோச்பார்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியான வாலிபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
7 கிலோ கஞ்சா, 3 அரிவாள் பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமுருகன் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்களான தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வம்(எ) செல்வசதீஷ் (வயது 26), லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி(26) மற்றும் செல்சீனிகாலனியை சேர்ந்த ஸ்டாலின் மகன் வினோத்(23) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா, 3 அரிவாள்கள் மற்றும் கஞ்சா செடிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
37.5 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது: ஆட்டோ பறிமுதல்
தூத்துக்குடி,
கோவில்பட்டியில் ஆட்டோவில் புகையிலைப் பொருட்கள் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 37.5 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொழில்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவைச் சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
வாலிபர் கைது; 37.5 கிலோ புகையிலை, ஆட்டோ பறிமுதல்
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த நபர் கோவில்பட்டி லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முருகராஜ் (வயது 24) என்று தெரியவந்தது. இதையடுத்து முருகராஜை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 37 கிலோ 500 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் தொடருகிறார் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியம் (CA) ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், கம்மின்ஸின் கேப்டன் பதவி குறித்து கேள்விகள் எழுந்தன. முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா தனது சுயசரிதையில், அப்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்த அனைவருக்கும் பந்தை சேதப்படுத்தும் திட்டம் தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பேன்கிராஃப்ட் ஆகியோரும் ஆதரவு தெரிவித்ததால் சர்ச்சை தீவிரமடைந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கம்மின்ஸ் திட்டவட்டமாக மறுத்தார். தனக்கு மணல் காகிதம் பயன்படுத்தப்பட்டது குறித்தோ, பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்தோ எதுவும் தெரியாது என்று விளக்கமளித்தார்.
கம்மின்ஸ்
இந்தச் சூழலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் டேவிட் பூன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் ஆகியோர் சிட்னியில் கம்மின்ஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பில் அவரது நலன், அணிக்கு வழங்க வேண்டிய ஆதரவு மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கம்மின்ஸின் தலைமைத்துவத்துக்கு வாரியம் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது.
நேர்மை
இதுகுறித்து டேவிட் பூன் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக பாட் கம்மின்ஸ் மற்றும் அணியின் மற்ற தலைவர்கள் உருவாக்கியுள்ள அணியின் கலாசாரத்தைப் பெருமையுடன் பார்ப்பதாகவும், கம்மின்ஸின் நேர்மை குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களைத் திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
ராமரை இப்படித்தான் காட்டுவதா? 'ராமாயணா' படத்துக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் நிதிஷ் பரத்வாஜ்
மும்பை,
'மகாபாரதம்' தொலைக்காட்சித் தொடரில் கிருஷ்ணராகவும், 2002-ம் ஆண்டு ஒளிபரப்பான 'ராமாயணா' தொடரில் ராமராகவும் நடித்த நிதிஷ் பரத்வாஜ், இப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பிரம்மாண்டமாக உருவான 'ராமாயணா'
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படம் 'ராமாயணா'. இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நமித் மல்ஹோத்ரா மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.4,000 கோடி எனக் கூறப்படுகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ், லட்சுமணனாக ரவி துபே, அனுமனாக சன்னி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராவணன் சித்தரிப்பு குறித்து விமர்சனம்
இந்நிலையில், 'மகாபாரதம்' தொலைக்காட்சித் தொடரில் கிருஷ்ணராகவும், 2002-ம் ஆண்டு ஒளிபரப்பான 'ராமாயணா' தொடரில் ராமராகவும் நடித்த நடிகர் நிதிஷ் பரத்வாஜ், இப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது, படத்தின் டிரெய்லர் வெளியானபோது அதைப் பாராட்டியதுடன், ஆஸ்கர் விருதைப் பெறும் அளவுக்கு இப்படம் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், படம் வெளியான பிறகு தனது பாராட்டைத் திரும்பப் பெற்றுள்ளார்.
ராவணன் ஒரு தாராளவாத, நியாயமான மன்னராகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், ராமரின் மாண்பு, கடமை, தியாகம் மற்றும் அறநெறிகள் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ராமர் சாதாரண மனிதராகவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்துடனும் காட்டப்பட்டிருப்பது ராமாயணத்தின் அடிப்படை நோக்கத்தை மாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.4,000 கோடி நிதி ஆதாரம் குறித்து கேள்வி
மேலும், சுமார் ரூ.4,000 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் நிதி ஆதாரங்கள் குறித்தும் நிதிஷ் பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார். லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற இதிகாசம் மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளைத் திரைப்படமாக உருவாக்கும்போது, அவற்றின் திரைக்கதைகளை ஆய்வு செய்வதற்கு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) போன்ற அமைப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். நிதிஷ் பரத்வாஜின் இந்த விமர்சனங்கள் தற்போது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி மாதத்துக்குள் நிறுவனங்கள் செலுத்த அறிவுறுத்தல்
சென்னை,
2026-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல நிதியை ஜனவரிக்குள் நிறுவனங்கள் செலுத்த அறிவுறுத்தல்
தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் பங்கு ரூ.20 மற்றும் நிறுவனத்தின் பங்கு ரூ.40 என ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிடப்பட்டு தொழிலாளர் நல நிதி தொகையினை தொழிலாளர் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான (2026) தொழிலாளர் நல நிதியை அடுத்த ஆண்டு (2027) ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தொழிலாளர் நல வாரியத்தில் 2026-2027-ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத் தொகை மற்றும் பாடநூல் உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்களை www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-06' என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளை கவர.. ஒகேனக்கல்லில் செயற்கை நீர்வீழ்ச்சி, கண்ணாடி பாலம் அமைக்க திட்டம்..!
தர்மபுரி,
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் கண்ணாடி பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொழுதுபோக்கு அம்சங்கள்
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. ஒரு ஆண்டில் சராசரியாக 15 லட்சம் பேர் இங்கு சுற்றுலா வந்து செல்கிறார்கள்.
அருவிகளில் குளியல், பரிசல் சவாரி ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய அம்சங்களாக உள்ளன. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்து செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான கூடுதல் பொழுது போக்கு அம்சங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
செயற்கை நீர்வீழ்ச்சி
ஒகேனக்கல்லில் ரூ.17 கோடியே 57 லட்சம் மதிப்பில் சுற்றுலா சார்ந்த மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த வசதிகள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. ஒகேனக்கல்லில் வயது முதிர்ந்தவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இதேபோல் அருவிகள் அமைந்துள்ள பகுதி அருகே இயற்கை அழகை முழுமையாக கண்டுகளிக்கவும், அருவிகளில் இருந்து நீர் திவலைகள் விழுவதை கண்டு ரசித்து சாகச உணர்வை பெறவும் கண்ணாடி பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்த பின்பு உரிய பரிந்துரைகளை பெற்று இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஸ்டேட்டஸில் நேரடியாக, லொகேஷன் பகிரலாம் : வாட்ஸ் அப்பில் புது வசதி
வாட்ஸ்அப்பில் ஒருவரின் இருப்பிடத்தைப் பகிர வேண்டுமானால், இதுவரை தனிப்பட்ட உரையாடல் வழியாகவோ அல்லது ஸ்டேட்டஸில் புகைப்படம், வீடியோவுடன் இருப்பிடக் குறியீட்டைச் சேர்த்தோ பகிர வேண்டியிருந்தது.
இந்த நடைமுறையை எளிமையாக்கும் வகையில், புகைப்படம் அல்லது வீடியோ இல்லாமலேயே நேரடியாக ஸ்டேட்டஸில் இருப்பிடத்தைப் பகிரும் புதிய வசதியை வாட்ஸ் அப் உருவாக்கி வருகிறது.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக உருவாக்கப்படும் இந்த வசதி, கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வாட்ஸ் அப் பீட்டா பதிப்பு 2.26.45.8-ல் கண்டறியப்பட்டுள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால், வாட்ஸ்அப்பின் 'அப்டேட்ஸ்' பகுதியில் ஸ்டேட்டஸ் உருவாக்கும்போது தனியாக 'லொகேஷன்' என்ற தேர்வு இடம்பெறும். அதனைத் தேர்வு செய்தால், பயனரின் தற்போதைய இருப்பிடம் தானாகக் காட்டப்படும். அதைப் பகிர்வதற்கு முன்பு சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.
துல்லியமான இருப்பிடத்தைப் பகிர விரும்பாதவர்கள், சாதனத்தின் அமைப்புகள் வழியாகத் தோராயமான இருப்பிடத்தைப் பகிரும் வாய்ப்பையும் பெறலாம். அதேபோல், தற்போதைய இடத்திற்கு பதிலாக, அதாவது லைவ் லொகேஷனுக்கு பதிலாக வேறொரு இடத்தையும் வரை படத்தில் தேர்வு செய்து பகிர முடியும். பகிரப்படும் இருப்பிடம் வழக்கமான ஸ்டிக்கராக இல்லாமல், வரைபட அட்டையாகத் தோன்றும். அதில் பச்சை நிறக் குறியீட்டுடன் இடத்தின் பெயர், முழு முகவரி ஆகிய விவரங்களும் இடம்பெறும்.
தற்போது இந்த வசதி உருவாக்கப் பணியில் மட்டுமே உள்ளது. பீட்டா சோதனையாளர்களுக்குக்கூட இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, அனைத்து பயனர்களுக்கும் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
தவெக அரசு மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது - மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீனவர்கள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு உலக மீனவர்கள் தின வாழ்த்துகள்! தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது திராவிட மாடல் ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதல்-அமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்! அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு,… pic.twitter.com/YJURRwTbbc
— M.K.Stalin (@mkstalin) November 21, 2026
கம்மின்ஸ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால்.... ஜோஷ் ஹேசில்வுட் அதிரடி கருத்து!
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடந்த பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அப்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருந்த அனைவருக்கும் தெரியும் என்று முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பேன்கிராஃப்ட் ஆகியோரும் ஆதரவு தெரிவித்ததால் சர்ச்சை தீவிரமடைந்தது. இதற்கிடையே தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனக்கு பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து எதுவும் தெரியாது என்று திட்டவட்டமாக மறுத்தார். மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் விளக்கமளித்தார்.
ஹேசில்வுட்
இந்நிலையில், கம்மின்ஸுக்கு ஆதரவாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளாக கேப்டனாக பாட் கம்மின்ஸ் செய்துள்ள பணிகளுக்கும், சமீபத்தில் அவர் அளித்த விளக்கத்துக்கும் நான் முழு ஆதரவு அளிக்கிறேன். அவர் மிகச்சிறந்த தலைவராக செயல்பட்டு வருகிறார். அணியில் உள்ள மற்ற வீரர்களிடம் கேட்டாலும் இதே கருத்தைத்தான் தெரிவிப்பார்கள். அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் கேப்டனாக இல்லாமல் வேறு ஒருவர் கேப்டனாக இருந்தால் அந்தச் சூழல் எப்படி இருக்கும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என்றார்.
மேலும், கம்மின்ஸ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் தான் என்ன முடிவு எடுப்பேன் என்பது குறித்தும் ஹேசில்வுட் கருத்து தெரிவித்துள்ளார். "அப்படியொரு சூழ்நிலையில் நான் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், எதிர்ப்புத் தெரிவித்து அணியில் இருந்து விலகுவது குறித்தும் நிச்சயமாக யோசிக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 25ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
டெல்லி,
டெல்லியில் வரும் 25ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் கூடி தண்ணீர் திறப்பு பற்றி விவாதிக்கின்றன.
இதனிடையே, வடகிழக்கு பருவமழை குறைந்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேவேளை, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்க இக்கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
அதேவேளை, கடந்த 6ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த இரு உத்தரவுகளையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. இந்த சூநிலையில் டெல்லியில் வரும் 25ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை உடனடியாக திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் அறிவுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு தவெக அரசை மட்டும் குறை கூற முடியாது - குஷ்பு
சென்னை,
விலைவாசி உயர்வு என்பது தமிழகத்தில் மட்டுமே நிலவும் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் இந்தப் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. என நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் குஷ்பு பேட்டி
தமிழகத்தில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விலைவாசி உயர்வுக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை மட்டுமே குறை கூற முடியாது என்று நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார். நவம்பர் 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
மத்திய கிழக்குப் போர் காரணம்
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், விலைவாசி உயர்வு என்பது தமிழகத்தில் மட்டுமே நிலவும் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் இந்தப் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்குப் பகுதிகளில் நிலவும் போர்ச் சூழல், சர்வதேசப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன என்றார்.
சில காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்
மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக தவெக அரசு ஆட்சிக்கு வந்ததால்தான் விலைவாசி உயர்ந்துள்ளது என்று குற்றம் சாட்டுவது சரியல்ல. தற்போதைய சூழலைப் பொதுமக்கள் சில காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் நாளை மறுதினம் திருச்சி பயணம்
சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் நாளை மறுதினம் திருச்சிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய் நேற்று திருச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். திருச்சி, புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்க இருந்தார்.
ஆனால், கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவு காரணமாக முதல்-அமைச்சர் விஜய்-யின் திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டது.
முதல்-அமைச்சர் விஜய் பயணம்
இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்-யின் திருச்சி பயணம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை மறுதினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் திருச்சி செல்கிறார்.
பின்னர், 18 கிலோ மீட்டர் ’ரோடு ஷோ’ செல்லும் முதல்-அமைச்சர் விஜய் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருச்சி, புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்களை திறந்து வைக்கும் முதல்-அமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். முதல்-அமைச்சர் விஜய்-யின் திருச்சி பயணத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.