இணையத்தில் கசிந்த ‘பீஸ்ட்' பட காட்சி


இணையத்தில் கசிந்த ‘பீஸ்ட் பட காட்சி
x
தினத்தந்தி 22 Dec 2021 10:20 AM GMT (Updated: 22 Dec 2021 10:20 AM GMT)

பீஸ்ட் படப்பிடிப்பில் எடுத்த சண்டை காட்சி என்ற பெயரில் ஒரு புகைப்படம் இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 65-வது படம். நாயகியாக பூஜா ஹெக்டே வருகிறார். யோகிபாபு, அபர்ணா தாஸ் ஆகியோரும் உள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். டப்பிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. 

பீஸ்ட் பட விஜய் தோற்றத்தை கடந்த ஜூன் மாதம் படக்குழுவினர் வெளியிட்டனர். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை இயக்குனர் டுவிட்டரில் பகிர்ந்தார். விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இசைக்கருவிகளுடன் இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வலைத்தளத்தில் வைரலானது. 

இந்த நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பில் எடுத்த சண்டை காட்சி என்ற பெயரில் ஒரு புகைப்படம் இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஒருவர் ராணுவ உடையில் நிற்கிறார். இதை வைத்து பீஸ்ட் படம் ராணுவம் சம்பந்தமான கதை என்ற தகவலும் பரவி வருகிறது. அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Next Story