ஆங்கில படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜா


ஆங்கில படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜா
x
தினத்தந்தி 17 Feb 2022 3:44 PM GMT (Updated: 17 Feb 2022 3:44 PM GMT)

இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் அடுத்து புதிதாக ஆங்கில படமொன்றுக்கு இசைமைக்க இருக்கிறார்.

இது இளையராஜா இசையமைக்கும் ஆயிரத்து 422-வது படம் ஆகும். இந்த படத்தை இங்கிலாந்தில் உள்ள பிரபல பட நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு ‘எ பியூட்டிபுல் பிரேக்கப்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் காதல் ஜோடி இங்கு சில நாட்கள் சேர்ந்து வாழ்ந்து பிறகு பிரிந்துவிட முடிவு செய்கின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பேய்களால் சில பிரச்சினைகள் வருகிறது. அவர்கள் சேர்ந்தே இருந்தார்களா அல்லது பிரிந்தார்களா என்ற கதையம்சத்தில் தயாராகிறது.

இந்த படத்தை அஜித் வாசன் உஜ்ஜினா இயக்குகிறார். கிரிஷ், மடில்டா ஆகியோர் நடிக்கின்றனர். திகில் படமாக தயாராகிறது

Next Story