சென்னை விமான நிலையத்தில் ரூ.3 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.3 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Nov 2021 9:07 AM GMT (Updated: 28 Nov 2021 9:07 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 லட்சம் போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக பிரிவுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து ஆந்திரா மற்றும் சென்னைக்கு 3 பார்சல்கள் வந்திருந்தன. அந்த பார்சலில் வாழ்த்து அட்டை என இருந்தது.

சந்தேகத்தின் பேரில் அந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் 52 பச்சை நிற போதை மாத்திரைகள் இருந்தது. மற்றொரு பார்சலில் 24 கிராம் உயர்ரக கஞ்சாவும், 3-வது பார்சலில் போதை பவுடரும் இருந்தது.

இதையடுத்து 3 பார்சல்களில் கடத்தி வந்த ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார்சலில் இருந்த சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள முகவரியில் விசாரித்த போது அவை போலி என தெரியவந்தது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story