2 கோவில்களில் அம்மன் தாலி திருட்டு


2 கோவில்களில் அம்மன் தாலி திருட்டு
x

நெகமம் அருகே 2 கோவில்களில் அம்மன் தாலி திருட்டுபோனது. இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெகமம்

நெகமம் அருகே 2 கோவில்களில் அம்மன் தாலி திருட்டுபோனது. இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாலி திருட்டு

நெகமம் அருகே காணியாலாம்பாளையம் பகுதியில் அகோர வீரபத்திர காளியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே மாரியம்மன் கோவிலும் அமைந்து இருக்கிறது. இந்த 2 கோவில்களிலும் நடராஜ் என்பவர் பூசாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவில் வழக்கம்போல் கோவில்களில் பூஜையை முடித்துவிட்டு கதவுகளை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு சென்றார். 

பின்னர் மறுநாள் காலையில் கோவில்களுக்கு வந்தார். அப்போது அகோர வீரபத்திர காளியம்மன் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மனின் கழுத்தில் கிடந்த 1 கிராம் தங்க தாலி திருட்டு போயிருந்தது. மேலும் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் கதவு உடைக்கப்பட்டு, சாமியின் கழுத்தில் கிடந்த 1 கிராம் தங்க தாலி திருடப்பட்டு இருந்தது. 

வலைவீச்சு

இதுகுறித்து நடராஜ் நெகமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கிடைத்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து கோவில்களில் புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை  திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 


Next Story