அடித்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிணமாக மீட்பு


அடித்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 2 Dec 2021 4:19 PM GMT (Updated: 2 Dec 2021 4:19 PM GMT)

மாமண்டூர் ஏரி உபரிநீரில் அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.

தூசி

மாமண்டூர் ஏரி உபரிநீரில் அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.

அடித்து செல்லப்பட்டார்

காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் முத்து (வயது 55), பட்டு தொழிலாளியான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். 

இவர் கடந்த 30-ந் தேதி மாலை  தூசி மாமண்டூர் ஏரி பார்ப்பதற்காக குடும்பத்தோடு  வந்தார். அப்போது ஆர்ப்பரித்து செல்லும் ஏரி உபரிநீரை பார்த்ததும் நீரில் குளிக்க ஆசைப்பட்டார். பின்னர் குடும்பத்தோடு அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். 

முத்து குளித்துக் கொண்டிருந்த போது கால் தவறி விழுந்ததில் ஏரி வெள்ள உபரி நீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து முத்துவை தீவிரமாக தேடினார். 

மாலை நேரமானதால் இருட்டு பகுதியில் தேட முடியாத சூழ்நிலையில் நேற்று  மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடியும் முத்துவின் உடல் கிடைக்கவில்லை.

2 நாட்களுக்கு பின்னர் பிணம் மீட்பு

 இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் என். விஜயராஜ், வெம்பாக்கம் தாசில்தார் சத்யன் மற்றும் வருவாய்த்துறையினர் மேற்பார்வையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 13 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் சேர்ந்து செய்யாறு தீயணைப்பு துறையினர் 11 பேர் சேர்ந்து தேடும் பணி தொடங்கியது. பின்னர் அவர் இரட்டை பாலம் அருகே பிணமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story