கும்மிடிப்பூண்டியில் மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் 40 பேர் கைது


கும்மிடிப்பூண்டியில் மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் 40 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2021 8:44 AM GMT (Updated: 4 Dec 2021 8:44 AM GMT)

கும்மிடிப்பூண்டியில் மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கும்மிடிப்பூண்டி பஜாரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ், விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் துளசிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கு பணப்பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

மறியலில் ஈடுபட்ட 40 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

Next Story