தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்


தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கான  இறுதி வாக்காளர் பட்டியல்
x
தினத்தந்தி 9 Dec 2021 4:04 PM GMT (Updated: 9 Dec 2021 4:04 PM GMT)

தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்

தர்மபுரி, டிச.10-
தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்களை கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டார்.
இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான திவ்யதர்ஷினி வெளியிட்டார். இதனை நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் மற்றும் 10 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
வாக்குச்சாவடிகள்
இதுதொடர்பாக கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 11 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 26 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 18 மண்டல அலுவலர்கள், 920 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் ஆண்கள்-85068, பெண்கள்-89079, இதர வாக்காளர்கள் -14 என மொத்தம்-17,4161 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிக்க இணை இயக்குநர், உதவி இயக்குநர் நிலையில் ஒன்றிய பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பதற்றமானவை
தர்மபுரி நகராட்சியில் 13 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பி.மல்லாபுரம், அரூர், கடத்தூர், கம்பைநல்லூர், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஅள்ளி மற்றும் பென்னாகரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் 14 பதற்றமான வாக்குச்சாவடிகள் என மொத்தம் 27 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 230 வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் மையம் தர்மபுரி அரசுகலைக்கல்லூரியில் அமைக்க தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்வில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சித்ராசுகுமார், உள்ளாட்சித் தேர்தல் பணி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாரிமுத்துராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஆர்.குருராஜன், தேர்தல் பணி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் 10 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story