விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Dec 2021 4:25 PM GMT (Updated: 13 Dec 2021 4:25 PM GMT)

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் சாமி சிலைகள் உடைத்த மர்ம நபரை போலீசாா் வலை வீசி தேடி வருகின்றனா்.


விழுப்புரம்,

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை கோவில் அர்ச்சகர் பரசுராமன் என்பவர் கோவிலை திறந்து சாமிகளுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கோவிலின் முன்பகுதியில் உள்ள உண்டியலை யாரோ மர்ம நபர் உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடுவதை பார்த்து அந்த நபரை அவர் பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

மேலும் கோவில் கோபுரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, பிரம்மா, அம்மன், விஷ்ணு, வாலீஸ்வரர், லட்சுமி, சரஸ்வதி ஆகிய சாமிகளின் சிமெண்ட் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் செயலாளர் வெங்கடேசன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கோவிலில் யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் உள்ளே புகுந்து சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story