சமுக்தியாம்பிகை அம்மன் கோவிலில் மானசாபிஷேக விழா


சமுக்தியாம்பிகை அம்மன் கோவிலில் மானசாபிஷேக விழா
x
தினத்தந்தி 13 Dec 2021 4:27 PM GMT (Updated: 13 Dec 2021 4:27 PM GMT)

சமுக்தியாம்பிகை அம்மன் கோவிலில் மானசாபிஷேக விழா

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் தாடகை மலையில் சமுக்தியாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகங்கள் யாரும் காண முடியாத வகையில் திரையீட்டு நடத்தப்படும். ஆனால் ஆண்டிற்கு ஒரு முறை கார்த்திகை மாதம் வளர்பிறை தசமி திதியில் பழச்சாறுகளை கொண்டு நடத்தப்படும் மானசாபிஷேக விழாவை மட்டும் பக்தர்கள் நேரிடையாக பார்க்கலாம். அத்தகைய மானசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அத்தி உள்ளிட்ட 24 வகையான பழங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. இதற்காக 500 கிலோ பழங்கள் கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து சமுக்தியாம்பிகை அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பழ வகைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story