தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 430 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 430 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Dec 2021 9:41 AM GMT (Updated: 17 Dec 2021 9:41 AM GMT)

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 430 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர், சிட்லபாக்கம், திருநீர்மலை, பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் இளங்கோவன் தலைமையில் சுகாதார அலுவலர்கள் அறிவுச்செல்வம், மொய்தீன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 285 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 74 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிந்தது. அந்த கடைகளில் இருந்து சுமார் 430 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.37,900 அபராதம் விதித்தனர்.


Next Story