பாலாற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்: பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் கதி என்ன?


பாலாற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்: பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் கதி என்ன?
x
தினத்தந்தி 26 Dec 2021 9:20 AM GMT (Updated: 26 Dec 2021 9:20 AM GMT)

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சென்னையைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேரின் கதி என்ன? ஆனது என்பது தெரியவில்லை.

சென்னை, 

செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்றில் அதிக அளவில் வெள்ளம் செல்கிறது. நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தையொட்டி சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு அருகே இருங்குன்றம்பள்ளியில் உள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றனர்.

அனைவரும் குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக 3 பேர் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடி வருகின்றனர். விசாரணையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் திரிசூலம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் லியோன்சிங் ராஜா (வயது 38), அவருடைய மகளான பிளஸ்-2 படித்து வரும் பெர்சி (16), அவரது அண்ணன் சேகரின் மகன் லெனின்ஸ்டன் (20) என்பது தெரியவந்துள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரின் கதி என்ன? ஆனது என்பது தெரியவில்லை. இதனால் சென்னையில் உள்ள அவர்களது உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Next Story