திசையன்விளையில் பரபரப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு


திசையன்விளையில் பரபரப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Dec 2021 9:53 PM GMT (Updated: 29 Dec 2021 9:53 PM GMT)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

திசையன்விளை:
திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
அரசு உதவி பெறும் பள்ளி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெபக்குமார் (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார்.
பாலியல் ெதால்லை
கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்தில் 11-ம் வகுப்பிற்கு பாடம் எடுக்க தலைமை ஆசிரியர் சென்றார். அப்போது, அந்த வகுப்பறையில் ஒரு மாணவிக்கு தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதை அறிந்த தலைமை ஆசிரியர் தலைமறைவாகி விட்டார்.
வலைவீச்சு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் திசையன்விளை போலீசில் நேற்று புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (ெபாறுப்பு) செல்வி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும், இதுபோன்ற மற்ற மாணவிகள் யாருக்காவது பாலியல் தொந்தரவு கொடுத்தாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணி இடைநீக்கம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை பணி இடைநீக்கம் செய்து, நெல்லை திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திசையன்விளையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
..........

Next Story