சூப்பர் பாஸ்பேட்டை உரம் பயன்படுத்தலாம்


சூப்பர் பாஸ்பேட்டை உரம் பயன்படுத்தலாம்
x
தினத்தந்தி 30 Dec 2021 10:13 AM GMT (Updated: 30 Dec 2021 10:13 AM GMT)

சூப்பர் பாஸ்பேட்டை உரம் பயன்படுத்தலாம்

விவசாயிகள் டி.ஏ.பி. உரத்துக்கு பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் மணிச்சத்து மற்றும் சல்பர், கால்சியம் போன்ற நுண்நூட்ட உரங்கள் சிறிதளவு உள்ளன. சூப்பர் பாஸ்பேட் உரம் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டு எளிதில் கிடைக்கிறது. இதில் கால்சியம் மற்றும் சல்பர் சத்து கூடுதலாக கிடைக்கிறது. நீரில் கரையும் மணிச்சத்து கிடைப்பதால் பயிரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களுக்கு சல்பர் அதிகம் தேவைப்படுவதால் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணெய் சத்துடன் எண்ணெய் சத்து பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பு, எண்ணெய் வித்து பயிர்களான தென்னை மற்றும் நிலக்கடலை, தோட்டக்கலை பயிர்களுக்கு தேவைப்படும் சூப்பர் பாஸ்பேட் உரத்தை வாங்கி பயன்பெறலாம்.
மாவட்டத்தில் 790 டன் பொட்டாஷ் உரம் பெறப்பட்டுள்ளது. யூரியா 2 ஆயிரத்து 732 டன், டி.ஏ.பி. 677 டன், சூப்பர் பாஸ்பேட் 664 டன், எம்.ஓ.பி. 990 டன், என்.பி.கே.காம்பளக்ஸ் 4 ஆயிரத்து 731 டன்னும் உரங்கள் இருப்பில் உள்ளது.
இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Next Story