கடை வாடகையை செலுத்த வேண்டும்


கடை வாடகையை செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 31 Dec 2021 9:57 AM GMT (Updated: 31 Dec 2021 9:57 AM GMT)

கடை வாடகையை செலுத்த வேண்டும்

உடுமலை, ஜன.1-
நிலுவை வைத்துள்ளவர்கள்  10 நாட்களுக்குள் கடை வாடகையை செலுத்த வேண்டும். இல்லை என்றால் கடை உரிமம்ரத்து செய்யப்படும் என்று உடுமலை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடை வாடகை
உடுமலைமத்திய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், கல்பனாசாலை, ராஜேந்திரா சாலை, தளி சாலை உள்ளிட்ட இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு நடத்திக்கொள்வதற்கான உரிமத்தை நகராட்சி நிர்வாகம், ஏலம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் விட்டுள்ளது.  கடைகளை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறவர்கள் ஒவ்வொரு மாதமும் கடை வாடகையை நகராட்சிக்கு செலுத்தவேண்டும். வாடகையை செலுத்தாவிட்டால் வாடகையுடன் அபராதத்தொகை சேர்க்கப்படுகிறது.  சிலர் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் இல்லை என்று கூறி பல மாதங்களாக வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் உத்தரவின்பேரில் நகராட்சி ஊழியர்கள், வாடகை நிலுவை வைத்திருக்கும் கடைகளுக்கு நேரில்சென்று வாடகை நிலுவைத்தொகையை செலுத்தும்படி வலியுறுத்தி வருகின்றனர்.அப்போது பல மாதங்களாக வாடகைத்தொகையை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பவர்கள் வாடகைத்தொகையை செலுத்தும்படியும், அவ்வாறு செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
எச்சரிக்கை
அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது  வாடகை செலுத்தாதவர்கள்  10நாட்களுக்குள் வாடகை செலுத்த வேண்டும். இல்லை என்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடை
பொது ஏலம் விடப்படும். அதில் இழப்பு ஏதும் ஏற்பட்டால் கடைக்காரர்களை பொறுப்பாக்கி தங்கள் மீது நீதி மன்றத்தின் மூலம் நடவடிக்கை தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து சிலர் வாடகை நிலுவைத்தொகையை நகராட்சியில் செலுத்தி வருகின்றனர்.

Next Story