சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 31 Dec 2021 10:13 AM GMT (Updated: 31 Dec 2021 10:13 AM GMT)

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு வருகிற 3-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
1 லட்சத்து 15 ஆயிரத்து 300 சிறுவர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாம் வருகிற 3-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இவர்களுக்கு வருகிற 3-ந் தேதி முதல் தடுப்பூசி இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் சிறுவர்கள் படிக்கும் பள்ளிக்கு சென்று செலுத்தப்பட உள்ளது. பள்ளி செல்லாத சிறுவர்களுக்கு அனைத்து தடுப்பூசி மையங்களிலும் 3-ந் தேதி முதல் தடுப்பூசி இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து ஏற்பாடுகள் தயார்
இந்த பணிக்காக சுகாதாரத் துறையின் பள்ளி சிறார் நல வாழ்வு திட்ட மருத்துவ குழு, நடமாடும் மருத்துவ குழு, மற்ற மருத்துவ குழுக்கள், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பணியாளர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். முகாமுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து பெற்றோரும் தங்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பயனடைய வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Next Story