ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு


ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு
x
தினத்தந்தி 31 Dec 2021 10:18 AM GMT (Updated: 31 Dec 2021 10:18 AM GMT)

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 82 ஆயிரத்து 665 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 305 இலங்கை தமிழர் கார்டுகள் உள்பட மொத்தம் 7 லட்சத்து 82 ஆயிரத்து 665 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கார்டுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைபருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், முழு கரும்பு ஒன்று, துணிப்பை ஒன்று ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு அறை
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதை முன்னிட்டு சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4 ந் தேதி தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது. அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் விடுபடாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்டுள்ள நாளில் சென்று ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் கார்டில் உள்ள நபர் சென்று பொருட்களை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகார் தெரிவிக்க விரும்பினால் கட்டுப்பாட்டு அறையை 0421 2971116, 2971173 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Next Story