குப்பையில் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு


குப்பையில் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 31 Dec 2021 10:21 AM GMT (Updated: 31 Dec 2021 10:21 AM GMT)

குப்பையில் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு

ொட்டிகள் வைக்கப்படாததால் பொது இடங்களில் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக 2-வது வார்டு பகுதியில் பனியன் நிறுவன கழிவுகள் மூடை, மூடையாக வந்து கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த குப்பை மற்றும் கழிவுகளில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ பற்ற வைத்து செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகேயும் குப்பையில் மர்ம ஆசாமிகள் அடிக்கடி தீ பற்ற வைத்து செல்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.  எனவே கணியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை நிறுத்தவும், குப்பைக்கு தீ வைப்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story