சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி


சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2022 9:45 PM GMT (Updated: 4 Jan 2022 9:45 PM GMT)

சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று மு.பெ.சாமிநாதன் கூறினார்.

சென்னிமலை
சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று மு.பெ.சாமிநாதன் கூறினார். 
நல வாரியம்
சென்னிமலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
உடல் உழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. 18 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 60 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதில் உறுப்பினர்களாக சேர முடியும். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 90 ஆயிரத்து 240 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
50 சதவீத பார்வையாளர்கள்
சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த பணியை பார்வையிட அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுமணல் வர உள்ளார். 
சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

Next Story