அனைத்து கடைகளும் அடைப்பு


அனைத்து கடைகளும் அடைப்பு
x
தினத்தந்தி 16 Jan 2022 10:01 AM GMT (Updated: 16 Jan 2022 10:01 AM GMT)

அனைத்து கடைகளும் அடைப்பு

முழு ஊரடங்கு காரணமாக காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 
முழு ஊரடங்கு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கை கடைபிடிக்கும் விதமாக காங்கேயத்தில் நேற்று பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் போன்ற அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல் பங்குகள் மற்றும் ஓரிரண்டு மருந்துக்கடைகளை தவிர அனைத்து கடைகளும் பூட்டிக்கிடந்தன.
 சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கோவை சாலை, ஆகிய சாலைகளிலும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி அமைதியாக காணப்பட்டது. தாராபுரம் சாலை, பழையகோட்டை சாலைகளில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் சாரை சாரையாக பழனி பாதயாத்திரை சென்றனர். மேலும் காங்கேயம் போலீசார் நேற்று காலை 6 மணியிலிருந்தே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

வெள்ளகோவில்
 வெள்ளகோவில் பகுதியில் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனை மற்றும் மருந்து கடைகள், பால் கடைகள், தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் நகராட்சி வாரச்சந்தை செயல்படும்  ஊரடங்கு உத்தரவால் வாரச்சந்தை செயல்படவில்லை. ஓட்டல் கடையில் பார்சல் மட்டும் அனுமதித்தனர்.வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர

Next Story