மத்திய அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 30 Jan 2022 4:22 PM GMT (Updated: 30 Jan 2022 4:22 PM GMT)

பெண்களுக்கான தனித்துவமான சேவைகள் புரிந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் மத்திய அரசின் நாரி சக்தி புரஸ்கார் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை 

புரஸ்கார் விருது
மகளிருக்கான தனித்துவமான சேவை குறிப்பாக சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண் களுக்கு அதிகாரம் அளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்ற வற்றில் தலைசிறந்த பங்களிப்பு அளித்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தின விழாவில் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. 
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு சான்றிதழ் மற்றும் 2 லட்சம் ரூபாய் காசோலையும் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. 
விண்ணப்பம்
இந்த ஆண்டு இந்த விருது பெற விரும்பும் பெண்களுக்கான தனித்துவமான சேவைகள் புரிந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதி உடைய பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் www.awards.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

Next Story