வேதாரண்யம் பகுதியில் விடிய, விடிய மழை


வேதாரண்யம் பகுதியில் விடிய, விடிய மழை
x
தினத்தந்தி 30 Jan 2022 4:22 PM GMT (Updated: 30 Jan 2022 4:22 PM GMT)

வேதாரண்யம் பகுதியலி் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாரான வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியலி் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாரான வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.
விடிய, விடிய மழை
வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வந்தது. இரவில் கடும் பனி பொழிவும் நிலவி வந்தது. இந்த நிலையில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி மழை  விடிய, விடிய பெய்தது. நேற்று காலையில் விட்டு மழை பெய்தது.  இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
 வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம், மூலக்கரை, அண்டகத்துறை, புல்வெளி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அறுவடை பணி பாதிகக்ப்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலை
கடந்த மாதம்(டிசம்பர்) பெய்த தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாயந்்தன. மழை நின்றவுடன் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றி நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து, உரம் தெளித்து வந்தோம்.  இந்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சம்பா  அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் உப்பள பகுதிகளில் மராமத்து பணி நடந்து வருகிறது. ஒரு சிலர் உப்பு வாறுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 95 சதவீதம் உப்பு உற்பத்திக்கான மராமத்து பணிகள் நிறைவு பெறவில்லை. தற்போது மழை பெய்ததால் உப்பு உற்பத்தி மற்றும் மராமத்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குளிர்ந்த காற்றுடனும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க 15 நாட்களாகும் என  உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளான கீழ்வேளூர், தேவூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருமணாங்குடி, குருக்கத்தி, கூத்தூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம் மற்றும் சிக்கல், ஆழியூர், அகரகடம்பனூர், சங்கமங்கலம், ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. கீழ்வேளூர் வட்டார பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 
நெல் அறுவடை பணிக்கா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் அறுவடை எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கன மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் மழை பெய்தது. 1 மணி நேரம் நீடித்த மழையால் அறுவடை செய்து காய வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Next Story