தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 30 Jan 2022 4:26 PM GMT (Updated: 30 Jan 2022 4:26 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

ரேஷன் கடையில் விலைப்பட்டியல்

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் ஏழை, எளிய தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மாதந் தோறும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விபரங்கள் குறித்த தகவல்கள் சரியாக தெரியாமல் உள்ளனர். எனவே ரேஷன் கடைகளில் பொருட் களின் விலை விபரப்பட்டியல் தினமும் வைக்க வேண்டும்.
முகமது கோயா, கூடலூர்.

ஆபத்தான டிரான்ஸ்பார்மர் 

  கோவை பீளமேடு கிழக்கு பிரிவு அலுவலக எல்லை பகுதிகளில் பெரும்பாலான டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், துளசியம்மாள் லே அவுட், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் உள்ள மின்மாற்றி கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சூழலில் உள்ளன. இவற்றை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  நா.லோகு, பீளமேடு.

சுகாதார சீர்கேடு

  கோவை லங்கா கார்னர் பாலம் அருகே ஒரு சிலர் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அந்தப்பகுதி வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக மாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மைக்கேல், கோவை.

தெருநாய்கள் தொல்லை

  கோவை மாநகராட்சியின் 90 -வது வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டங்கூட்டமாக சுற்றும் தெருநாய்கள் அந்த வழியாக செல் பவர்களை துரத்துகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலையும் நீடித்து வருகிறது. இது குறித்து புகார் செய்தால் யாரும் வந்து தெருநாய்களை பிடித்து செல்வது இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து தெருநாய்களுக்கு முறையாக கருத்தடை செய்ய வேண்டும்.
  அன்புமணி, கோவைப்புதூர்.

மலைபோல் கழிவுகள்

  கோவை உக்கடத்தில் இருந்து பேரூர் செல்லும் பைபாஸ் சாலையில் உக்கடம் பெரியக்குளத்திற்கு எதிரே சில இடங்களில் கட்டிட கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிகள் மற்றும் குப்பைகள் மலைபோல் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆகவே அந்த பகுதிகளில் கழிவுகளை கொட்டி சுகாதாரம் மாசுபடுவதை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மணிகண்டன். உக்கடம்.

சுகாதாரம் இல்லாத உணவகம்

  கோவையை அடுத்த கோவைப்புதூரில் அம்மா உணவகம் உள்ளது. இங்கு கூலி தொழிலாளர்கள், ஏழை,எளிய மக்கள் உணவு சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் அங்கு கடந்த ஒரு வாரமாக கைகழுவும் இடத்தில் தண்ணீர் நிரம்பி தேங்கி கிடக்க ிறது. மேலும் இதனால் துர்நாற்றம் மூக்கை துளைக்கிறது. உணவு அருந்த செல்லும் பொதுமக்களுக்கு இதனால் நோய் தொற்றும் சூழ்நிலை உள்ளது. இதனை அங்குள்ள ஊழியர்களும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். ஆகவே சுகாதாரம் இல்லாத உணவகத்தை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  வேல்ராஜ். கோவைப்புதூர்.

சாலை சீரமைப்பு

  கோவைப்புதூர் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு குடியிருப்புகள் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் இங்குள்ள பல பகுதிகளில் இன்னும் சாலைகள் குண்டும்,குழியுமாக உள்ளன. குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பகுதிகளில் மூடியும், மூடா மலும், உள்ளன. குறிப்பாக பெருமாள் கோவில் பகுதி, பிரஸ் என்கிளேவ் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. என வே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  முருகன். கோவைப்புதூர்.

ஒளிராத மின்விளக்குகள்

  கோவை சேரன்மாநகர் மகாலட்சுமி கார்டன் பேஸ்-2 பகுதியில் மின்விளக்குகள் கடந்த ஒரு மாதமாக ஒளிரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மர்ம ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
  பழனியப்பன், சேரன்மாநகர்.

குப்பைகளால் துர்நாற்றம் 

கோவை துடியலூர் அருகில் உள்ள அசோக மரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால் பல இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலை யோரத்தில் கொட்டப்படுவதால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
கண்ணன், அசோகபுரம்.

கவர்களில் மாத்திரை

  நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் இங்கு ஆதிவாசி மக்கள் உள்பட தோட்டத் தொழிலாளர்கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் மருத்துவ சிகிச்சைக்காக அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர் பரிந்துரையின்படி பல நாட் களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அந்த மாத்திரை கள் எந்த வேளைகளில் சாப்பிட வேண்டும் என்பது தெரிவது இல்லை. எனவே தனியார் ஆஸ்பத்திரியில் வழங்குவதுபோது மாத்திரைகளை கவர்களில் வழங்க வேண்டும்.
  ஆனந்த், முன்டக்குன்னு.


Next Story