தெக்கலூரில் விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


தெக்கலூரில் விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:24 PM GMT (Updated: 31 Jan 2022 4:24 PM GMT)

தெக்கலூரில் விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அவினாசி:
கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தெக்கலூரில் விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஆர்ப்பாட்டம்
பேச்சுவார்த்தைபடி ஏற்றுக்கொண்ட  ஒப்பந்த கூலியை அமல்படுத்த வேண்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்கள் வேலை இழந்து தவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கூலி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவினாசி ஒன்றியம் தெக்கலூர் பஸ் நிறுத்தம் அருகில் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அவினாசி, தெக்கலூர், பல்லடம், 63 வேலம்பாளையம், மங்கலம், சோமனூர், புதுப்பாளையம், கண்ணம்பாளையம் உள்ளிட்ட விசைத்தறி உரிமையாளர்சங்கத்தினர், பெண்கள் உள்ளிட்ட விசைத்தறியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கருப்பு கொடி 
 ஆர்ப்பாட்டத்தில் அரசு அறிவித்த கூலியை தர மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து நாளை (புதன்கிழமை) கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களிலும் கருப்பு கொடி கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

Next Story