நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 60 பேர் வேட்புமனு தாக்கல்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 60 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 1 Feb 2022 10:10 AM GMT (Updated: 1 Feb 2022 10:10 AM GMT)

சென்னையில் கடந்த சனிக்கிழமை வரை 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தலில் நேற்று நிலவரப்படி 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் தொடங்கியது. நேற்று (திங்கட்கிழமை) 60 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 35 பேரும், பெண்கள் 25 பேரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகளுக்கான தேர்தலில், வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாள் முதல் 3 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி இதுவரை மொத்தம் 34 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆவடி மாநகராட்சியில் 1 பா.ம.க. மற்றும் 5 சுயேச்சைகள் என 6 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 3 ஆண்களும், 3 பெண்களும் அடங்குவர்.


Next Story