இல்லம் தேடி கல்வி மேலாண்மை குழு கூட்டம்


இல்லம் தேடி கல்வி மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2022 10:27 AM GMT (Updated: 1 Feb 2022 10:27 AM GMT)

இல்லம் தேடி கல்வி மேலாண்மை குழு கூட்டம்

கோத்தகிரி

தமிழக அரசின் ஆணைப்படி, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழுவின் ஒருங்கிணைப்பு கூட்டம் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஒன்றியத்துக்குட்பட்ட தெங்குமரஹடா பழங்குடியின கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு இல்லம் தேடி கல்வி நீலகிரி மாவட்ட கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சுகுணா மனோகரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைசாமி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சுமதி, இல்லம் தேடி கல்வி மாநில பயிற்சி கருத்தாளர் நஞ்சுண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் சுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். ஊர் கூடுவோம், பள்ளி நாடுவோம், மேலாண்மை குழு அமைப்போம் ஆகிய தலைப்புகளில் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. 

இதில் பள்ளியில், குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெற்றதுடன், பருவம் எய்திய குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் உள்ள சிரமங்கள், சரியான முறையில் அமைக்கபடாத கழிவறைகள் பயன்பாடுகளில் உள்ள இடர்பாடுகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் உள்ள கஷ்டங்கள், மன உளைச்சல்கள் ஆகியன குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதுசார்ந்த விளக்க படங்கள், விளக்க உரைகளை பெற்றோரிடம் விளக்கிக் கூறினர். கூட்டத்தில் கோத்தகிரி வட்டாரக் கலைக்குழு ஒருங்கிணைப்பாளரகள் ஆசிரியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சுமதி நன்றி கூறினார்.

Next Story